Advertisement

பக்க வாத்தியம்

யாருக்காக டீ ஆத்துறோம்?

-கல்லுாரி மற்றும் பல்கலை ஆசிரியர்களுக்கு, ௭வது ஊதிய கமிஷனை அமல்படுத்தாததைக் கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக, டில்லியில், சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. 'அய்பெக்டோ' என்ற கூட்டமைப்பின் சார்பில் நடந்த, இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, நெல்லையிலும், ௫ம் தேதி, ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.ம.தி.தா.இந்து கல்லுாரியில், ஆசிரியர்கள் வகுப்புக்குள் நுழைந்த போது, ஒரு மாணவரைக் கூட காணோம். அவர்கள் அனைவரும், 'நீட்'டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் பங்கேற்பதற்காக,கல்லுாரிக்கே வரவில்லை.'ஆளே இல்லாத கடையில, டீ ஆத்தச் சொல்றாங்களே...' என, ஆசிரியர்கள் புலம்பியபடி, வகுப்பறைகளை காலி செய்தனர்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement