Advertisement

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி-6

கல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந் திரம் ஆசிரியர் களுக் கும் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கும் வழங் கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது.

இதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட கலைத் திட்டக் குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரி டம் தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கியிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத் துகளை, தினமலர் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களைத் தெரி வித்துள்ளனர். அந்த கருத்துக்களையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.

பள்ளிகளில் தன்னாட்சிப் பற்றி ஒரு விளக்கம்



பள்ளிகளில் தன்னாட்சி என்ற ஒரு கல்விப் புரட்சியைத் தொடங்கிய பின், அது தொடர்பாக பலரும் தினமலருக்குத் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டு வருகிறார்கள். தினமலரும் விளக்கங்களைத் தந்து கொண்டிருக்கிறது. ஆசிரியர்களும் கல்வியாளர்களும் பகிர்ந்துள்ள கருத்துக்களில் முக்கியமான இரண்டு.
ஒன்று: தன்னாட்சி முறை தவறாகப் பயன்படுத்தி பல நிர்வாகங்கள் பணம் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். இரண்டு: தன்னாட்சி என்ற கொள்கையை கல்விதரும் முறையைத் தவறாக தனியார் மயமாக்குதல் என்று கருதுகிறார்கள். இந்தச் சூழலில் தான் தன்னாட்சிப் பற்றி இந்த விளக்கம் தேவைப்படுவதாகக் கருதுகிறோம்.

தமிழ்நாட்டில் 178 தன்னாட்சி கல்லூரிகள்



தன்னாட்சி முறையானது கல்லூரிகளில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 12 பல்கலைக் கழகங்களில் 178 கல்லூரிகள் தன்னாட்சி நிலை உள்ளது. மதுரை பல்கலையில் 27 கல்லூரிகளில் தன்னாட்சி முறைப் பின்பற்றப்படுகிறது. கல்லூரிகளில் தரம் வெகுவாக உயர்த்தப்பட வேண்டும் என்ற நிலையில் தன்னாட்சி முறை ஒரு சிறந்த வழியாக க்எஇ எனப்படும் பல்கலைக் கழக மானியக் குழு முடிவெடுத்து அதைச் செயல்படுத்தத் தொடங்கியது. தன்னாட்சி முறையில் சில அடிப்படை நன்மைகள் உள்ளன. முதலில், ஒரு கல்லூரிக்குத் தன்னாட்சி தருவதற்கு முன், க்எஇ பல நிபந்தனைகள் விதிக்கிறது. நிர்வாகம், கல்லூரி உள் கட்டமைப்பு, ஆசிரியர் நியமனம், நூலகம், விடுதி, அறிவியல் பாடத்திற்கான ஆய்வகங்கள் - அத்தனையும் போதிய வசதியுடன் இருக்க வேண்டும். அந்தக் கல்லூரி குறைந்தது பத்து ஆண்டுகளாக இயங்கியிருக்க வேண்டும். மாணவர் தேர்ச்சி விகிதங்களும் சிறந்த முறையில் இருக்க வேண்டும். இவ்வளவும் சரியாக இருந்தால் தான் அக்கல்லூரிக்கு வல்லுநர் குழு பரிந்துரைச் செய்ய பல்கலை மானியக் குழு தன்னாட்சி முறையை அக்கல்லூரிக்கு அனுமதிக்கும். ஆகையால் தன்னாட்சிக் கல்லூரிகளில் தரமானது உறுதி செய்யப்படுகிறது. இதே முறையைத் தான் பள்ளிகளில் தன்னாட்சி முறைக் கொண்டு வர, அரசு பின்பற்ற வேண்டும், பின்பற்றும் உறுதியாக.

தன்னாட்சி என்ற கல்விப் புரட்சி



கல்வியில் தரத்திற்கு முதன்மை தருவதற்குக் காரணமே வருங்கால இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்க்க இருக்கும் மாணவர்களின் நலன்தான். அவர்களுடைய இன்றியமையாத நலனைப் பாதுகாத்து போற்ற வேண்டியது அரசின் தலையாய கடமை, சமூகப் பொறுப்புணர்வு. இந்தக் குறிக்கோளை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிதான் பள்ளிகளில் தன்னாட்சி என்ற கல்விப் புரட்சி.

நாம் முன்பே குறிப்பிட்டுள்ளதுபோல், தன்னாட்சி முறைத் தவறாகப் பயன்படுத்திப் பள்ளி நிர்வாகங்கள், பணம் பண்ணத் தொடங்கி விடுவார்கள் என்ற ஆழமான அச்சத்தைத் தான் ஒரு சிலர் வெளிப்படுத்தியுள்ளனர். தன்னாட்சி முறையை அவர்கள் எதிர்க்கவில்லை. அவர்களுக்கும் தன்னாட்சியின் நன்மைகள் என்னவென்று நன்றாகவே தெரியும். அவர்களுடைய அச்சம் பொய் யென்றோ, தவறானது என்றோ சொல்லவில்லை. இன்றைய பொதுவான சமூக சூழல் காரணமாக இருக்கலாம். என்றாலும் குறைகளைக் காரணம் காட்டி நிறையான ஒன்றை மறுப்பது சரியாக இருக்க முடியாது. தவிர, இன்றும் நல்ல முறையில் இயங்குகின்ற தன்னாட்சி கல்லூரிகள் இருக்கத்தான் செய்கின்றன.

சமூகப் பொறுப்புணர்வு தேவை



தவறுகளை நீக்க வேண்டுமென்றால் தவறான கல்வி நிலையங்களைத் தவிர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அப்பொழுது, தவறான கல்வி நிலையங்கள் காலப்போக்கில் மாறிவிடும், அல்லது பயனிழந்து மறைந்துவிடும். எப்படிப் பார்த்தாலும், பள்ளிகளிலும், தன்னாட்சி முறை அமுல்படுத்த இதுவே சரியான தருணமாகப் படுகிறது. பல ஆண்டுகள் கழித்து, புதிய பாடத்திட்டம் எனும் முக்கிய பாதையில் அடிஎடுத்து வைக்கிறோம். அந்தப் பாதையில் மற்றுமொரு முக்கிய நிலைதான் தன்னாட்சி. மாணவர் நலன் கருத்தில் கொண்டால், தவறான நிர்வாகங்களை சுட்டிக் காட்டும் சமூக பொறுப்புணர்வு செயல்பட்டால், தன்னாட்சி உறுதியாக நம் தமிழகத்தைத் தலைநிமிரச் செய்யும்.

தன்னாட்சி என்பது தனியார் மயமாக்கல் அல்ல



தன்னாட்சி என்பது தனியார் மயமாக்குதல் என்ற எண்ணமும், பலருக்கு இருப்பதாகத் தெரிகிறது. உறுதியாக, தன்னாட்சி தனியார் மயமாக்குதல் இல்லை. அரசு கல்லூரிகளும், தன்னாட்சி நிலை பெற்றுள்ளன. இந்தியாவில் மொத்தத்தில் 613 தன்னாட்சி கல்லூரிகளில், 169 அரசு கல்லூரிகள் தன்னாட்சி பெற்றவை. தமிழ்நாட்டில் உள்ள மொத்த 178 தன்னாட்சி கல்லூரிகளில், 22 அரசு கல்லூரிகள் தன்னாட்சியுடன் இயங்குகின்றன. இந்த ஒரு செய்தியே தன்னாட்சி தனியார் மயமாக்கல் இல்லை என்பதை உறுதிப் படுத்துகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement