Advertisement

சொல்கிறார்கள்

நஞ்சை திரும்ப எடுக்க 3௦ ஆண்டு பிடிக்கும்!

இயற்கை விவசாயம் செய்து வருவது குறித்து கூறும், நடிகர் மாதவன்: மும்பையில் வசித்து வரும் நான், வாங்கும் காய்கறிகளில் ரசாயனம் கலந்துள்ளதால், வீட்டு மாடியில் எங்களுக்கு தேவையான காய்கறிகளை விளைவிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு செடியும் காய்த்து நிற்பதை பார்க்கும் போதே தனி சுகம். இதனால், மார்க்கெட்டில் காய் வாங்குவதை நிறுத்தி, பல மாதம் ஆகிறது.
எனக்கான பொறுப்பு, கடமைகளை உணர்ந்து தான், துளிக்கூட ரசாயனம் இல்லாத, இயற்கை விவசாயம் பக்கம் திரும்பினேன். உரத்தை உண்டாக்கி, மண்ணை பதமாக்கி, கெட்டுப் போன நிலத்துக்கு புது உயிரை கொடுப்பதற்காக, பல ஆண்டுகளாக ஆய்வு செய்தேன். பின் அதை செயல்படுத்தி, அதன் பலனை அனுபவித்தும் வருகிறேன்.என் வீட்டு மாடியில் விளைந்த தக்காளியை, புழு சாப்பிடும்போது உடனே அடித்து கொல்ல வேண்டும் என்ற கொலை வெறி தோன்றியது. பல சமயம் புழுக்களை அடித்து கொன்றுள்ளேன்.
அப்போது தான், ஒரு விவசாயி தன் குழந்தை மாதிரி பார்த்துப் பார்த்து உற்பத்தி செய்த பொருட்கள், தன் கண் முன் தண்ணீர் இல்லாமல் செத்து அழியும் போது, அவன் ஏன் தற்கொலை செய்து கொள்கிறான் என்பது புரிந்தது. இது, உலகத்தையே உலுக்க வேண்டிய விஷயம்.நாம் இன்று சாப்பிடும் உணவு எல்லாமே, 'ஜெனிடிக்கலி மாடிபைட்!' எதுவுமே ஒரிஜினல் இல்லை. நாம் குடிக்கும் பாலை விட, விஷமான பொருள் உலகத்தில் கிடையாது. அதைவிட கொடுமை, ஆர்கானிக் என்ற போர்வையில், பொய்யாக பல பொருட்கள் விற்கப்படுவது!இந்தியாவில் உள்ள விவசாய நிலத்தில் படிந்த நஞ்சை திரும்ப எடுக்க, ௩௦ ஆண்டு பிடிக்கும் என கூறப்படுகிறது. ரசாயனத்தை மானாவாரியாக கொட்டிக் கொட்டி, மண்ணில் இருந்த உயிர்ச்சத்து காலியாகி விட்டது. 'என் நிலத்தில் ரசாயன உரத்தை பயன்படுத்த மாட்டேன்' என, வீராப்பாக இருந்தாலும், நன்மை கிடைக்காது.பக்கத்து நிலத்தில் பயன்படுத்தும் உரம் கூட, என் நிலத்தைப் பாழாக்கும். அதுதான், அதன் வேலை, சக்தி எல்லாம். என் நிலத்தை ஆர்கானிக்காக தயார்படுத்தும்போது பக்கத்திலேயும் அதே போக்கு இருக்க வேண்டும்.
இல்லையெனில், அது ஆர்கானிக் உற்பத்தி கிடையாது. இதை எல்லாம் கற்ற பிறகு தான், நாம் விளைய வைக்கும் காய்கறிகளில் புழு வந்தால் தான் நல்லது, ஆரோக்கியமானது என புரிந்தது.திண்டுக்கல் மாவட்டம், பழநியில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருவதுடன், ஆராய்ச்சியும் செய்து வருகிறோம்; சுத்த இயற்கை விவசாயம். எங்களைத் தேடி வருபவர்களுக்கு முறையாக சொட்டு நீர்ப்பாசனம், இயற்கை விவசாயம் பற்றி சொல்லிக்
கொடுக்கிறோம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement