Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேச்சு: 'விரைவில் நல்லாட்சி தருவோம்' என, குடுகுடுப்பைக்காரரைப் போல், ஸ்டாலின் பேசி வருகிறார். தவறான தகவல்களை தந்து, குறுக்கு வழியில் ஆட்சியை கலைக்கவும், ஆட்சியை பிடிக்கவும் முயன்று வருகின்றனர். இவற்றை எல்லாம் மக்கள் அறிந்ததால் தான், ஜெயலலிதா இருந்தபோது, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட, தி.மு.க.,வால் பெற முடியவில்லை.


தமிழக முதல்வர் பழனிசாமி பேச்சு: சில எதிர்க்கட்சிகள், திட்டமிட்டு இந்த அரசின் மீது பழி சுமத்தியும், குற்றம் சொல்லியும் வருகின்றன. குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர், இந்த ஆட்சி அமைந்ததும், 'இது நீடிக்குமா...' என்றார். அதன்பின், நிதிநிலை அறிக்கையின்போதும், மானியக் கோரிக்கையின்போதும், இதே ஐயத்தை எழுப்பினார். ஆனால், இந்த அரசு தொடர்ந்து நீடிப்பதோடு, ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை, தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
தமிழக வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர், கே.சி.வீரமணி பேச்சு: 'நானும் ரவுடி தான்' என, காமெடி நடிகர் போல் தினகரன், 'நான் தான் துணை பொதுச்செயலர்' என, சொல்லிக் கெண்டிருக்கிறார். அவர்கள் விடும் உருட்டல், மிரட்டலுக்கு, யாரும் அடிபணியாதீர்கள். என்னைக் கூடத்தான், தினகரன் குழுவினர் மிரட்டுகின்றனர். எம்.ஜி.ஆர்., ஊட்டி வளர்த்த கட்சியில் வளர்ந்தவன் நான்; இந்த மிரட்டல்களுக்கு எல்லாம், அடிபணிய மாட்டேன்.


தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி: தமிழக கவர்னர், பா.ஜ.,வின் தலைவர் போல் செயல்படுகிறார். எனவே, அவரை மாற்றிவிட்டு, தமிழகத்தை சேர்ந்த ஒருவரை நிரந்தரமாக, முழுநேர கவர்னராக நியமிக்க வேண்டும்.'அடுத்த என்ன அறிவிப்பு வரப் போகிறதோ...' என, நினைக்கத் தோன்றும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி பேச்சு: என் அரசு, மக்களின் நலனுக்காக மிகப்பெரிய மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தயங்கியது இல்லை. எங்களுக்கு அரசியலை விட, நாட்டு நலனே முக்கியம்.'உங்களிடமிருந்து வித்தியாசமான அறிக்கை வரும் என எதிர்பார்த்தால், நீங்களும் மத்தவங்களை மாதிரியே பேசுறீங்களே...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:ஒவ்வொரு மாநிலமும், அதன் மருத்துவ சேவைக் கட்டமைப்பை பாதுகாக்கும் வகையில், மருத்துவ மாணவர் சேர்க்கை முறையை நிர்ணயித்துக் கொள்ள, அனுமதிக்க வேண்டும். அதற்கு, கல்வியையும், மருத்துவக் கல்வியையும், மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என, மத்திய அரசுக்கு, அரசியல் ரீதியில் அழுத்தம் கொடுத்து, மாநில உரிமைகளை வென்றெடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement