Advertisement

அக்கம் பக்கம்

செம்மறி ஆடும், பீதியும்!

பரிசு என்ற வார்த்தையை கேட்டாலே, கர்நாடகா முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, சித்தராமையாவுக்கு வியர்த்து விடுகிறது.சில மாதங்களுக்கு முன், அவருக்கு ஏற்பட்ட மோசமான சம்பவம் தான், இதற்கு காரணம். காங்., மூத்த நிர்வாகி ஒருவர், சித்தராமையாவுக்கு, விலை உயர்ந்த வாட்ச்சை, பரிசளித்தார். இந்த வாட்ச்சின் விலை, ஒரு கோடி ரூபாய் என, எதிர்க்கட்சியினர் வதந்தியை பரப்பி விட, விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.நான்கு திசைகளிலும் இருந்து வந்த விமர்சன அம்புகளால், கிறுகிறுத்துப் போன, சித்தராமையா, வேறு வழியில்லாமல், அந்த வாட்ச்சை, சட்டசபையில், சபாநாயகரிடமே ஒப்படைத்து விட்டார்.சமீபத்தில், கர்நாடகாவில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்த அமைப்பினர் நடத்திய பாராட்டு விழாவில், சித்தராமையா பங்கேற்றார்.திடீரென ஒருவர், 'முதல்வருக்கு எங்கள் அன்பு பரிசாக, செம்மறி ஆட்டை வழங்குகிறோம்' என, அறிவித்ததும், சித்தராமையாவின் முகம் இருண்டு விட்டது.'மறுபடியும் நம்மை சிக்கலில் மாட்டி விடுகின்றனரே' என, பரிசை ஏற்க தயங்கினார். மேடையில் அமர்ந்திருந்த மற்ற தலைவர்கள், 'செம்மறி ஆடு தானே, பரிசாக கிடைக்கிறது; ஒரு பிரச்னையும் வராது; தைரியமாக வாங்குங்கள்' என, சமாதானப் படுத்தியபின் தான், அதை வாங்கினார், சித்தராமையா.'பரிசு என்ற வார்த்தையை கனவில் கேட்டால் கூட, நம்ம தலைவர் பேயறைந்தது போல் ஆகிவிடுகிறார்' என, 'கமென்ட்' அடித்தனர், நிகழ்ச்சிக்கு வந்த கதர்ச்சட்டைக்காரர்கள்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement