Advertisement

பக்க வாத்தியம்

எம்.ஜி.ஆர்., படத்தை தேடிய அலுவலர்கள்

திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டியில், முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு பிறந்த நாள் விழா, சமீபத்தில் நடந்தது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.விழா நாளன்று மாலையில் தான், அதற்கான வேலைகளை, ஏற்பாட்டாளர்கள் செய்ய துவங்கினர். மேடையில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கிய பின், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா படத்தைத் தேடினர். அதற்குள் பொதுமக்கள் விழாவிற்கு வந்தமர்ந்து விட்டனர்.விழா ஏற்பாட்டாளர்கள், மைக்கில், பொதுப்பணித் துறை அலுவலர்களை அழைத்து, 'முன்னாள் முதல்வர்கள், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா படங்களை கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்' என, பலமுறை கேட்டனர்.விழாவிற்கு வந்திருந்தவர்களோ, 'பிறந்த நாள் விழாவே, எம்.ஜி.ஆருக்கு தான். அவரது படத்தை முன்கூட்டியே வைக்க கூடாதா...' என, வருத்தப்பட்டு முணுமுணுத்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement