Advertisement

சொல்கிறார்கள்

இல்லத்தரசிகள் கை நிறையசம்பாதிப்பதில் மகிழ்ச்சி!



Fooddoo.com நிறுவனத்தின், சி.இ.ஓ., சண்முகசுந்தரம்: வேலைவாய்ப்புக்காக வெளியூரிலிருந்து சென்னை வருவோருக்கு, நல்ல சாப்பாடு கிடைப்பது பெரும்பாடாக உள்ளது.இப்பிரச்னையை எங்கள் தொழிலுக்கு பயன்படுத்த, ஒன்றரை ஆண்டு களுக்கு முன், நானும், என் நண்பரும் இணைந்து ஆரம்பித்தது தான், புட்டோ.காம்!இல்லத்தரசிகள், தங்கள் வீட்டுக்கு தினமும் சமைப்பதையே, கொஞ்சம் கூடுதலாக சமைத்து தந்தால் போதும். அதை நாங்கள் எடுத்து போய், தேவை இருக்கும் வாடிக்கையாளருக்கு வழங்குவோம்; இது தான் எங்கள் பிசினஸ்.ஒவ்வொரு முறையும் இல்லத்தரசிகள் சமைத்து தரும் உணவுக்கான தொகையை கணக்கிட்டு வைப்போம். 1,000 ரூபாய் சேர்ந்ததும், அவர்கள் வங்கி கணக்குக்கு, 'ஆன்லைன்' மூலம் அனுப்பி விடுவோம் அல்லது, ௧௫ நாள் அல்லது மாதம் ஒருமுறை என, அவர்கள் விருப்பத்துக்கேற்ப வாங்குபவர்களும் உள்ளனர்.தற்போது, ௨௫ - ௬௫ வயது வரையுள்ள, ௧௩௦க்கும் அதிகமான இல்லத்தரசிகள், எங்கள் நிறுவனத்தின் உறுப்பினராக உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் மாதம், ௫,௦௦௦ - ௪0 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.
எங்கள் நிறுவனத்தின் வாயிலாக, பல நுாறு வாடிக்கையாளர்கள் வீட்டுச் சாப்பாட்டை சாப்பிட்டு நிம்மதியாக உள்ளனர். அதைவிட முக்கியமான விஷயம், பல இல்லத்தரசிகள் கை நிறைய சம்பாதித்து, மகிழ்ச்சியாக உள்ளனர். இது, எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.இந்தத் தொழிலை, ௧௦ லட்சம் ரூபாய் முதலீட்டில் துவங்கினோம். இப்போது, மாதம், நான்கு லட்சம் ரூபாய் வரை, 'டேர்ன் ஓவர்' கிடைக்கிறது. நாங்கள் இன்னும் பெரிய அளவில் வளர, நிறையவே வாய்ப்புள்ளது.மார்க்கெட்டிங் தலைவர் பொன்னுவேல்: பிசினஸ் ஆரம்பிக்கும் முன், உணவு சிக்கல், தேவைகளை கண்டறிந்தோம். அடுத்ததாக, உணவு திருவிழாக்களில் கலந்து, மக்களின் உணவு ரசனையை அறிந்தோம்.
சுவை மற்றும் சுகாதாரமாக சமைக்கும் இல்லத்தரசிகளை தேடிப் போய், அவர்களிடம் எங்கள் பிசினஸ் பற்றி கூறினோம்.முதல் கட்டமாக, அவர்கள் வீடுகளுக்கு சென்று சமையலறை பராமரிப்பு, உணவின் தரம், சுவையை பரிசீலித்தோம். திருப்தியாக இருந்தால், 'புட் சேப்டி அண்ட் ஸ்டாண்டர்ஸ்டு அதாரிட்டி ஆப் இந்தியா' சான்றிதழ் வாங்கிக் கொடுத்து, அவர்களை எங்கள் நிறுவன உறுப்பினர்களாக தேர்வு செய்தோம்.இல்லத்தரசிகள், தாங்கள் சமைக்க உள்ள உணவு வகை மற்றும் அளவுகளை, முதல்நாளே எங்கள், 'ஆப்' மூலமாக தெரிவித்து விடுவர்.
உணவு தேவைப்படுவோர், தங்களுக்கு வேண்டிய உணவு வகைகளை, அதிகபட்சமாக டெலிவரிக்கு மூணு மணி நேரத்திற்கு முன், அதே, 'ஆப்' வாயிலாகத் தேடி, 'புக்' செய்து, பணத்தையும் கட்டலாம். வினியோகித்து பணம் வாங்கும் முறையும் உள்ளது.இல்லத்தரசிகளும், வாடிக்கையாளர்களும், ௧௫ நாள், ஒரு மாதத்திற்கு என, தங்களது மெனு, ஆர்டரை முன்கூட்டியே, 'ஆப்'பில் பதிவேற்றமும் செய்து கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள், தங்கள் லொக்கேஷன் அல்லது வேறு லொக்கேஷனில் வசிக்கும் இல்லத்தரசியின் மெனுவை, 'புக்' செய்தாலும், வினியோகம் செய்வது,
எங்கள் பொறுப்பு.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement