Advertisement

டீ கடை பெஞ்ச்

பல்கலையில் கருத்தரங்கு நடத்தியதில் அரசியல்?


''மின்னல் வேகத்தில் செயல்படுறாரு பா...'' எனக் கூறியபடியே, நாயரிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தார்
அன்வர்பாய்.
''என்ன பாய்... வெயில் திடீர்ன்னு இப்படி மண்டைய பொளக்குது...'' என்ற அண்ணாச்சி, ''சரி... ஏதோ சொல்ல வந்தீயளே... சொல்லும்...'' எனக் கேட்டார் பாயிடம்.
''தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர், மாபா பாண்டியராஜன், மதுரைக்கு வந்தாருங்க... ஜெ., தொறந்து வைச்ச, உலக தமிழ் சங்கத்தைப் பார்வையிட்டாரு...
''இதுல, ஏற்கனவே, ஒலி, ஒளிஅமைப்பு சரியில்லேன்னு, ஒரு குற்றச்சாட்டு இருக்கு... ௨௫ கோடி ரூபா மதிப்புல கட்டினதுல எப்படி இந்த பிரச்னை வந்துச்சுன்னு சிந்திச்சுக்கிட்டே, வேற என்னென்ன பிரச்னைகள்ன்னு அமைச்சர், அங்கிருந்து இயக்குனர்கிட்டே கேட்டாரு...
''அவரு என்னத்தச் சொன்னாரோ தெரியலே... மாபாவே, தான் ஏற்கனவே வச்சிருந்த குறிப்புகள்லேர்ந்து எல்லாத்தையும் படிச்சு, 'இன்ஸ்ட்ரக் ஷன்' குடுத்தாரு பா...'' என்றார் அன்வர்பாய்.
''நல்லது நடந்தா சரிங்க...'' என்றார்அந்தோணிசாமி.
''தலைமை செயலகத்துல ஒருத்தர் இருக்கார் ஓய்... சேர்ல உட்கார்ந்தபடியே, எல்லா வேலையும் பார்க்கறார்...'' என, அடுத்த தகவலுக்கு
மாறினார் குப்பண்ணா.
''என்ன விஷயம் வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''மக்கள் தொடர்புத் துறையில, பத்திரிகை தொடர்புக்குன்னு துணை இயக்குனர் ஒருத்தர் இருக்கார்... 'போஸ்டிங், டிரான்ஸ்பர்' வேணும்ன்னா, இவரை அணுகலாம்... போர்டு வைக்காத குறையா, எல்லா போஸ்டிங்கும் போடறார்... லகரங்கள் தான் இலக்கு... ஏற்கனவே, அரசுக்கு 'ரிப்பேர்' ஆகிப் போயிருக்குற புகழ், இவரால இன்னும் ஜாஸ்தியா, 'டேமேஜ்' ஆகப் போறது...'' என்றார் குப்பண்ணா.
''துாத்துக்குடிவரைக்கும் போறேன்... சுப்ரமண்யா... சுப்ரமண்யா...'' என, திடீரென பக்திப் பரவசமான அண்ணாச்சி,
கிளம்பினார்.''நான் இன்னொரு மதுரை மேட்டர் சொல்றேங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.''என்ன பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''காமராஜர் பல்கலைக் கழக மேட்டர் இது... இங்கே ஒரு கருத்தரங்குக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை பேச அழைத்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியிருக்கு...
''அவரை
அழைத்த பின்னணியில், பெரிய அரசியல் இருக்குமோன்னு, பேராசிரியர்கள்
சந்தேகப்படுறாங்க...''துணைவேந்தர் செல்லத்துரைக்குஎதிரா, எஸ்.சி., -எஸ்.டி.,யினர் தொடர்ந்த ரெண்டு வழக்குகள் இருக்குங்க... இதை, திருமாவளவன் மூலம் சமாளிக்கலாம்ன்னு நினைச்சு, அவரை பேச
அழைச்சிருக்காங்க...''இதைப் பார்த்துட்டு, 'புகழ் பெற்ற கல்வி மையம் அரசியல் களமாகவும் மாறிடுச்சே'ன்னு, கல்வியாளர்கள் கவலை தெரிவிச்சிருக்காங்க...'' என்றார்
அந்தோணிசாமி.''அவர் பேசிய விஷயம் சாதாரண சப்ஜெக்ட் தானே... இதுக்கெதுக்கு விசனப்படணும் ஓய்...'' என்றபடி, கிளம்பினார் குப்பண்ணா.
நண்பர்கள்பின்தொடர்ந்தனர்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Giridharan S - Kancheepuram,இந்தியா

    மக்கள் தொடர்பு அலுவலரை செயல்படறாரு இதில் என்ன தப்பு இருக்கு. என்ன லகரங்கள் வங்கம்மாள் பின்னால் வரவேற்கலாம். சுப்ரமணிய எல்லோருக்கும் வேலை குடு

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement