Advertisement

'டவுட்' தனபாலு

பா.ஜ., தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ்: அ.தி.மு.க.,வுக்கும், எங்களுக்கும் இருப்பது, 'கிவ் அண்ட் டேக் பாலிசி' தான்.

டவுட் தனபாலு: அ.தி.மு.க., அரசுக்கு நாங்கள் ஆதரவைத் தருவோம்... பதிலுக்கு, மத்திய அரசின் திட்டங்களுக்கும், முன்னெடுப்புகளுக்குமான ஆதரவை, அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வோம் என்பதைத்தான் இவ்வளவு நாசுக்காச் சொல்றீங்களா என்ற, 'டவுட்' வருதே...!


பா.ஜ., -- எம்.பி., சுப்பிரமணியன் சாமி: முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை இழந்துவிட்டார். அ.தி.மு.க., ஆட்சி தொடர வேண்டுமெனில், மற்றொருவரை முதல்வராக தேர்வு செய்ய, சசிகலாவிடம் கேட்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், தி.மு.க., உள்ளே வந்து விடும்.

டவுட் தனபாலு: சசிகலா தரப்பின் தலையீடு இல்லாமல் ஆட்சி நடக்க ஆதரவு அளிப்பதாக, நுாற்றுக்கும் மேற்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்திருக்காங்க... இந்த நிலையில், சசிகலாவிடம், முதல்வர் பழனிசாமி கருத்துக் கேட்டால், அவர்களில் பலரும் அதிருப்தி அடைந்து, தனி வழிக்கு போவாங்களே... அப்புறம் எப்படி, ஆட்சி தொடரும்கறது தான், மக்களின், 'டவுட்!'


தி.மு.க., முதன்மை செயலர் துரைமுருகன்: தி.மு.க., என்பது கட்சி அல்ல; இயக்கம். தேர்தலுக்காக வந்த இயக்கம் அல்ல தி.மு.க., கட்சிகள் தேர்தலில் தோற்று போனால், செத்து போகும். இயக்கம் தோற்றாலும், மறுபடியும் எழுந்து நிற்கும்... அது தான், தி.மு.க.,



டவுட் தனபாலு: வெற்றி - தோல்விகளைப் பற்றி கவலை இல்லை என்பதை, எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது மட்டும்தான் சொல்றீங்க... தேர்தல் பிரசாரத்தில் ஏன் சொல்வதில்லை... தேர்தலுக்காக வந்த இயக்கம் இல்லை என்றால், அப்படி நீங்க எத்தனை தேர்தல்களை புறக்கணித்திருக்கீங்க என்பது தான், மக்களின், 'டவுட்!'

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement