Advertisement

அக்கம் பக்கம்

'கொடுத்து வைக்கவில்லையே...!'


நேர்மையாக பணியாற்றும் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும், கவலையில் உள்ளனர். ரயில்வே அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு, வர்த்தக துறைக்கு மாற்றப்பட்டது தான், இதற்கு காரணம்.'ரொம்ப நல்ல மனிதர்; ரயில்வே துறையில், சாதித்து காட்ட வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தார்; அவருக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை' என, புலம்புகின்றனர்.ரயில்வே துறையில் செலவுகளை குறைத்து, வருவாயை அதிகரித்து, வெளிநாடுகளில் உள்ளது போன்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்டவர், சுரேஷ் பிரபு.துவக்கத்தில் சிவசேனா கட்சியில் இருந்தவர், இவர். வாஜ்பாய் அமைச்சரவையில், சிவசேனா சார்பில், அமைச்சர் பதவியை வகித்த அனுபவம், இவருக்கு உண்டு.
சுரேஷ் பிரபுவின் ஆர்வத்தை அறிந்த, பிரதமர் மோடி, அவரை அழைத்து வந்து, ரயில்வே அமைச்சர் பதவியை கொடுத்தார். இதற்கு பின் தான், அவர், முறைப்படி, பா.ஜ.,வில் இணைந்தார்.தான் கூறியபடி, ரயில்வேயில் பல புதுமைகளை புகுத்த முயன்றார்; சமீபத்தில் நடந்த சில ரயில்விபத்துகள், அவரது திறமைக்கு முட்டுக்கட்டை போட்டு விட்டன.விரக்தி அடைந்த அவர், 'ரயில்வே துறையே வேண்டாம்' என, பிரதமரிடம் கூறவே, அதை ஏற்று, இப்போது, ரயில்வேக்கு பதிலாக, வர்த்தக துறை அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே அதிகாரிகளோ, 'திறமையான ஒரு அமைச்சரின் கீழ் பணியாற்ற, நமக்கு தான் கொடுத்து வைக்கவில்லை; ஆனால், வர்த்தக துறையில் உள்ள அதிகாரிகளுக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது' என, ஏக்கத்துடன் கூறி வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement