Advertisement

பக்க வாத்தியம்

வைகையை யார் சரிசெய்ய போகிறார்?



ஈஷா யோகா மைய நிறுவனர், சத்குரு கலந்து கொள்ளும், 'நதிகள் மீட்போம்; பாரதம் காப்போம்' விழிப்புணர்வு பேரணி மதுரை வந்தது.பேராசிரியர், ஞானசம்பந்தம் பேசுகையில், 'நதிகளை மீட்போம்; பாரதம் காப்போம் விழிப்புணர்வு அட்டையை, கையில் துாக்கிப் பிடிக்க வேண்டும். ஆனால், வெயிலுக்காக அட்டையை தலைக்கு மேல் வைத்து நிழல் தேடுகிறோம். விழிப்புணர்வு அட்டையே நிழல் தரும் போது, நதிகளை இணைத்து, இயற்கை வளத்தை காத்தால், நாடே வளம் பெறும் என்பதை உணர்ந்து, நாம் செயல்பட வேண்டும்' என்றார்.'அதெல்லாம் சரி தான். வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கட்டும்; மற்றது தானாக நடக்கும்...' என, நிருபர்கள் சிலர் முணுமுணுத்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement