Advertisement

சொல்கிறார்கள்

அடர் நிறங்களை தவிர்க்கலாம்!



பச்சை குத்துதல் குறித்து கூறும், சரும மருத்துவர், சிவகுமார்:வண்ணங்களை ஊசிக்குள் ஏற்றி, சருமத்தின் மேல் பகுதியில் வரையப்
படுவது, 'டாட்டூ' எனப்படும் பச்சை குத்துதல். இப்படி வரையும்போது, ஊசி எந்த அளவுக்கு ஆழமாக சருமத்துக்குள் செல்கிறது என்பதை பொறுத்து, டாட்டூ நீடித்திருக்கும் காலம் அமையும்.இதில், தற்காலிக டாட்டூ, வலி ஏற்படுத்தாது, குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அழிந்துவிடும். நிரந்தர டாட்டூ போடும் போதும், போட்ட பின்னும் சில மணி நேரத்துக்கும் வலி இருக்கும்.டாட்டூ போட்ட பகுதியை, குறிப்பிட்ட காலத்துக்கு வெளிச்சம் படாமல் பாதுகாக்க வேண்டும். டாட்டூ சென்டரில் பரிந்துரைக்கப்பட்ட, ஆன்டி - பாக்டீரியல் கிரீமை குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை உபயோகிக்க வேண்டும்.டாட்டூ போட்ட அடுத்த, ௧௫ நாட்கள் வரை, அதன் மீது எந்த ரசாயனமும் படாமல் பார்த்து கொள்வதுடன், அந்தப் பகுதியில், 'சோப்' உபயோகிப்பதையும் தவிர்க்க வேண்டும்.டாட்டூ பகுதியில், சரும செல்கள் செயலிழந்து, சுருங்கி காணப்படும். எனவே, டாட்டூவை சொறிவது, அந்தப் பகுதிக்கு அழுத்தம் தருவது, ஒத்தடம் கொடுப்பது கூடாது.ஒருவருக்கு உபயோகித்த ஊசியை, மறுபடி பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, காச நோய், மஞ்சள் காமாலை உட்பட, பல நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உருவாகி விடும். மேலும், உடல்நிலை சரியில்லாத நிலையில், டாட்டூ போடுவதை தவிர்க்க வேண்டும்.தரமில்லாத மை, அளவுக்கு அதிகமான நிறங்கள், சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தவிர்ப்பது நல்லது. மையின் அடர்த்தி அதிகமாக இருந்தால், டாட்டூவைச் சுற்றிஇருக்கும் பகுதிகளும் சேதம் அடையும். இது, 'கிரானுலோமா' எனும் பிரச்னையை ஏற்படுத்தி, திசுக்களை சேர்த்து கட்டியாக்கி விடும்.காலப்போக்கில் அந்த கட்டி, புற்றுநோயாகவும் மாறலாம். மேலும், இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, சிறுநீரகங்களையும் பாதிக்கலாம். எனவே, அடர் நிறங்களான சிவப்பு, மஞ்சள்
நிற மிகளை தவிர்க்கலாம்.ரேடியாலஜி சிகிச்சையின் போது வெளிப்படும் கதிரியக்கங்களால், டாட்டூ இட்ட பகுதி பாதிப்படையும். எனவே, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்கச் செல்வோர், மருத்துவர்களிடம் டாட்டூ குறித்து முன்னரே சொல்லி விடுவது நல்லது.டாட்டூ போடப்பட்ட போது எந்த அளவுக்கு ஆழமாக போடப்பட்டது என்பதை பொறுத்து, லேசர் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் டாட்டூ நீக்கப்படும். லேசர் முறையில், அதிகபட்சம், 5 - 10 முறையாவது செய்து கொள்ள வேண்டியிருக்கும். அப்படியும் முழுவதுமாக டாட்டூ அழியவில்லை எனில், 'சர்ஜரி' செய்து தான் நீக்க வேண்டும்.
அறுவை சிகிச்சையில் டாட்டூவை நீக்கும் போது, அதன் வடு இருக்கும். 'பிளாஸ்டிக் சர்ஜரி' முறையில் இதை சரி செய்யலாம். இருந்தாலும், டாட்டூவுக்கு முன் இருந்த பழைய சருமம் மீண்டும் வராது. எனவே, டாட்டூ போடும் முன், நன்கு யோசித்து செய்வது நல்லது.பொதுவாக, டாட்டூ போடுவது சருமத்தை மட்டுமல்ல, உடலின் உள்ளுறுப்பு களையும் சேர்த்து பாதிக்கும். அதனால், தொடை, கழுத்து, தோள்பட்டை,
மார்புப் பகுதி, தசை இல்லாத எலும்புப் பகுதிகள் மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் டாட்டூ போடக் கூடாது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement