Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: தி.மு.க., நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், த.மா.கா., கலந்து கொள்ளவில்லை. அனிதாவின் தியாக மரணத்தை, சில அரசியல்வாதிகள் கொச்சைப்படுத்துவது தவறு.

சேலம் சட்டம் - ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் சுப்பு லட்சுமி பேச்சு: இன்று சமூகத்தில், திருநங்கையருக்கு வேலை கொடுக்க, தயக்க நிலை உள்ளது. பொது இடங்களில் அவர்கள், தவறாக நடந்து கொள்வதாக சித்தரிக்கப்படுவதால், மனரீதியான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். காக்கி சட்டையை அணிந்துள்ள போலீசாரே, அவர்களை எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை உள்ளது. இந்த துறைக்கு, திருநங்கையரும் பணியாற்ற வரத் துவங்கி விட்டனர்; அவர்களை, நாம் வரவேற்க வேண்டும்.

தமிழக, காங்., தலைவர் திருநாவுக்கரசர் அறிக்கை: பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டியது, இன்றைய அவசிய தேவையாக உள்ளது. தேர்தல்களை மேலும் தள்ளிப்போட முயற்சிகளை மேற்கொள்ளாமல், உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று, தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையம், உடனடியாகத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வி.சி., தலைவர் திருமாவளவன் பேட்டி: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. எங்கு பார்த்தாலும், வன்முறை, படுகொலை, வெறியாட்டம், தீவைப்பு தொடர்கிறது. இதுகுறித்து, முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை, தீவிரப்படுத்த வேண்டும்.


தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினரே கிடையாது தினகரன். உறுப்பினரே இல்லாத ஒருவர், 'அ.தி.மு.க., பொதுக்குழுவில் கலந்து கொள்பவர்கள் மீது, நடவடிக்கை எடுப்பேன்' என்பது, எள்ளி நகையாடுவது போல் தான் உள்ளது.ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் சரத் யாதவ் பேட்டி: வாஜ்பாய், அத்வானி தலைமை யில் இயங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், தப்போது மோடி தலைமையில் இயங்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. அப்போது, கூட்டணி கட்சிகளுக்கு அதிக மதிப்பு வழங்கப்பட்டது. இப்போது, கூட்டணி கட்சிகளின் வாய்ப்பு பறிக்கப்பட்டு வருகிறது.

'உங்கள் பாட்டி, மறைந்த பிரதமர் இந்திரா அமல்படுத்திய, அவசர நிலை காலத்தை விடவா இப்போது மோசமாக நடக்கிறது...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், காங்., துணை தலைவர் ராகுல் பேச்சு:பத்திரிகைகளுக்கு, மோடி அரசு மறைமுக நெருக்கடியை கொடுக்கிறது. மோடியே நெருக்கடி கொடுத்து வருவது, நமக்கு தெரியும். சில பத்திரிகைக்காரர்கள், இதை நேரடியாக என்னிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள், மோடியைக் கண்டு பயப்படுகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement