Advertisement

'டவுட்' தனபாலு

தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்: பா.ஜ., வுக்கு, தனியாகத்தான் நிற்க வேண்டும் என்ற அவசியம் உள்ளது. ஏனெனில், அதோடு கூட்டணிக்கு யாரும் தயாராக இல்லை. ஆனால், எங்களுக்கு அப்படியில்லை.



டவுட் தனபாலு: 2014 லோக்சபா தேர்தலில், தமிழக காங்கிரசின் நிலை என்ன என்பதைத்தான் பார்த்தோமே... இது, 2016 சட்டசபை தேர்தலிலும் தொடர்ந்திடக் கூடாது என்பதற்காக, கடந்தமுறையை விட குறைந்த தொகுதிகளை ஒதுக்கிய போதும், தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தீங்க... இவ்வளவு வீராப்பு பேசும் நீங்க, 'தி.மு.க.,வை காப்பாற்றத்தான், கூட்டணி வைக்கிறோம்'னு சொன்னாலும் சொல்வீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை...!

துணை முதல்வர் பன்னீர்செல்வம்: ஜாதகம் சரியில்லாத சிலர், 'இந்த ஆட்சி நீடிக்காது' என, ஜோசியம் சொல்கின்றனர்.

டவுட் தனபாலு: பழசை எப்படி அதற்குள் மறந்தீங்க... 'இந்த ஆட்சி, நீடிக்காது; நீடிக்க கூடாது... விரைவில், மக்கள் எதிர்பார்க்கும் அரசு அமையும்'னு, பல நுாறு முறை நீங்களும் தான் ஆரூடம் சொல்லி இருக்கீங்க... இப்போ உங்க ஜாதகம் எப்படி இருக்கு; என்ன பரிகாரம் செய்தீங்க என்ற, 'டவுட்' வருதே...!



முதல்வர் பழனிசாமி: தமிழகத்தில், அ.தி.மு.க.,வின் இரு பெரும் தலைவர்கள், 27 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து, பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு அளித்தனர்.


டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வின் பன்னீர்செல்வம், மூன்று முறை முதல்வரா இருந்திருக்காரு... அவரைப் பத்தி, ஒரு வார்த்தையும் சொல்லலையே... திட்டங்கள் எதையும் அவர் செயல்படுத்தலையா... இல்லை, திட்டமிட்டு மறந்துட்டீங்களா என்ற, 'டவுட்'டை, தினகரன் தரப்பு எழுப்பிடப் போகுது...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement