Advertisement

அக்கம் பக்கம்

பா.ஜ.,வினரின் பொக்கை வாய் சிரிப்பு!


பாஜ.,வில், பிரதமர் நரேந்திர மோடியும், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவும் இணைந்து எடுத்துள்ள அதிரடி முடிவுகளால், மூத்த தலைவர்களில் சிலர் அதிருப்தியில் இருந்தாலும், பல தலைவர்கள், உற்சாகத்தில் உள்ளனர்.'கட்சியில், 75 வயதை கடந்தவர்களுக்கு, அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட மாட்டாது' என்பது, ஏற்கனவே அதிரடியாக முடிவு எடுக்கப்பட்டது.இதை காரணமாக வைத்துத் தான், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களுக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது. இதனால், இவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.இதையும் மீறி, கல்ராஜ் மிஸ்ரா, நஜ்மா ஹெப்துல்லா போன்ற மூத்த தலைவர்களுக்கு, அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. பின், அவர்களிடமிருந்து, பதவி பறிக்கப்பட்டது.நஜ்மா ஹெப்துல்லா, கவர்னராகி விட்டார். கல்ராஜ் மிஸ்ரா, தற்போது தான், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பதால், விரைவில், இவருக்கும் கவர்னர் பதவி தரப்படுவதாக, கட்சி மேலிடம் உறுதி அளித்துள்ளது.எந்த பதவியும் இல்லாமல் இருக்கும், பி.சி.கந்துாரி, பகத் சிங் கோஷ்யாரி, பாபுலால் கவுர் ஆகிய மூத்த தலைவர்களுக்கும், கவர்னர் பதவி தரப்படுவதாக கூறப்பட்டுள்ளது.இதனால், பா.ஜ.,வில் உள்ள, 75 வயதை கடந்த மூத்த தலைவர்கள் பலரும், இப்போதே கவர்னர் பதவி கனவில் மிதக்க துவங்கியுள்ளனர்.'வயதான காலத்தில், ஒரு கவுரவமான பதவி கிடைப்பது, எல்லாருக்கும் அமையாது; நமக்கு அந்த பதவி கிடைத்தால், சந்தோஷம் தானே' என, நம்பிக்கையுடன், பொக்கை வாய் தெரிய சிரிக்கின்றனர், அந்த தலைவர்கள்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement