Advertisement

பக்க வாத்தியம்

எஞ்சிய தொகையில் கட்டினால்'எக்கோ' தான் அடிக்கும்!


மதுரையில், உலகத் தமிழ்ச் சங்கத்தில், மலேசியத் தமிழ் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் பங்குபெற்ற பயிலரங்கம் அண்மையில் நடந்தது. மைக், 'எக்கோ' அடித்ததால், பேசுவது துளியும் புரியவில்லை. சிறப்பு அழைப்பாளரான பேராசிரியர் பேச்சிமுத்து பேசத் துவங்கியதும், 'எக்கோ' அடித்தது. 'பேசுவது சரியாக கேட்கிறதா? எதிரொலி இருப்பதால் பலருக்கு கேட்கவில்லை என நினைக்கிறேன்' என்றார்.மலேசிய மாணவர்கள், 'ஒன்றுமே புரியவில்லை' என்றனர். இதையடுத்து, பயிலரங்கம் ரத்து செய்யப்பட்டது. அருகில் உள்ள மற்றொரு கட்டடத்துக்கு அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். மீண்டும் பயிலரங்கம் துவங்கியது; அங்கும் இதே கூத்து தான். வேறு வழியின்றி, அனைவரும் பேசி முடித்தனர்.'உலகத் தமிழ்ச் சங்கக் கட்டடம் பல கோடியை விழுங்கியுள்ளது. இதில் பலருக்கு, 'கட்டிங்' கொடுத்த வகையில் செலவு தொகை போக, எஞ்சிய தொகையில் கட்டடம் கட்டினால், 'எக்கோ' அடிக்காமல் குயிலின் குரலா கேட்கும்' என, மலேசிய மாணவர்கள் சிலர் கிண்டலடித்ததைப் பார்த்து, தமிழக பேராசிரியர்கள் தலைகுனிந்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement