Load Image
Advertisement

சொல்கிறார்கள்

விலங்கு கொழுப்பு,ரசாயனம்சேர்ப்பதில்லை!


ஆர்கானிக் சோப் தயாரிக்க, 5,000 ரூபாய் முதலீட்டில் தொழில் துவங்கியுள்ள, சென்னை, அடையாறைச் சேர்ந்த, தேஜா விஜய்சிங்: உ.பி., மாநிலத்திலிருந்து, சென்னைக்கு மாற்றலாகி வந்தோம். பொழுதுபோக்காக கைவினைக் கலைகள் செய்ய கற்று கொண்டேன். 'ரிட்டர்ன் கிப்ட்'டுக்காக, கிராப்ட் பொருட்கள் செய்து பிசினசாக செய்து வந்தேன்.நிறைய புது விஷயங்களை தேடி தேடி கற்பேன். அப்படித் தான், ஆர்கானிக் சோப் தயாரிக்கவும் கற்றுக் கொண்டேன். சென்னையில் ஆர்கானிக் விழிப்புணர்வு அதிகம் இல்லாத காலம் அது. அப்போது, விற்பனை குறைவாகத் தான் இருந்தது. ஆனால், சமீபகாலமாக ஆர்கானிக் மார்க்கெட் பிரபலமானதும், என் ஆர்கானிக் சோப்பையும் மக்கள் தேடி வாங்க ஆரம்பித்து விட்டனர்.இன்று, மூலிகை சோப், பால், கிரீம், தேன் கலந்த சோப் என்ற பெயரில் கிடைக்கும் பல சோப்புகள், கெமிக்கல்களால் தயாரிக்கப்பட்டவை தான். தவிர, அவற்றில் விலங்கு கொழுப்புகள் தான் பிரதானமாக இருக்கும். நான் தயாரிக்கும் ஆர்கானிக் சோப்பில், 1 சதவீதம் கூட கெமிக்கலோ, விலங்கு கொழுப்போ கிடையாது.'கிளிசரின், ஷியா பட்டர்' என, சருமத்துக்கு ஈரப்பதத்தையும், மிருதுத்தன்மையையும் கொடுக்கும் பொருட்களை மட்டுமே சேர்த்து சோப் தயாரிக்கிறேன். கலர்களுக்கு உணவுக்கான நிறமிகளும், வாசனைக்கு அரோமா எண்ணெய்களும் தான் சேர்க்கிறேன்.

ஷியா பட்டர் சோப், சருமத்துக்கு நல்ல ஈரப்பதத்தையும், வழவழப்புத் தன்மையையும் கொடுக்கும். குளிக்கும் போது, நார் உபயோகிப்போம் இல்லையா... அந்த நாரையே சோப்பாக தயாரிக்கிறேன். அதற்கு, 'லுபா சோப்' என்று பெயர்; அது, சருமத்தை, 'ஸ்கரப்' செய்து, இறந்த செல்களை நீக்கும்.முல்தானி மிட்டிங்கிறது அழகு சிகிச்சைகளில் தவிர்க்க முடியாதது. 'பேஸ்பேக், கிரீமில்' எல்லாம் சேர்க்கும் அதை வைத்தும், ஒரு வகை சோப் தயாரிக்கிறேன். இது, பருக்களையும், அவை ஏற்படுத்தின தழும்புகளையும் போக்கும்.'சார்க்கோல் சோப்' என்ற சோப் வகையை, தேங்காய் ஓடுகளை சுட்டெடுத்து கரியாக்கி, சலிச்சு, அதில் தயாரிக்கிறேன். இது, மங்கு பிரச்னையை விரட்டும்.இந்த தொழிலுக்குப் பெரிய முதலீடோ, தொழிற்சாலை வசதியோ தேவை இல்லை. கிளிசரின், ஷியா பட்டர், ஸ்டவ், சிலிக்கான் மோல்டு, புட் கலர்ஸ், அரோமா ஆயில் என,
மிக குறைந்த பொருட்கள் தான் இதற்கு தேவை. 'மைக்ரோவேவ் அவன்' இருந்தால் அதிலேயும் செய்யலாம்; மிஷின் தேவையில்லை.பத்து வகையான சோப் தயாரிக்கிறேன். ஒவ்வொரு வகையிலேயும், 1 கிலோ அளவு சோப் தயாரிக்க, 10 வகைகளுக்கும் சேர்த்து, ௫,000 ரூபாய் முதலீடு போதும். 10 கிராம் அளவுள்ள சோப், ௫௦ ரூபாய்க்கு விற்கலாம். ௧௫ ஆயிரம் ரூபாய் வரை லாபம் பார்க்கலாம். அழகு, ஆரோக்கியத்தில் அதிக அக்கறையா இருக்கும் மக்கள், நிச்சயம் இந்த சோப்புகளைத் தேடி வந்து வாங்குவர்.



வாசகர் கருத்து (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement