Advertisement

டீ கடை பெஞ்ச்

பெண் அதிகாரியின், 'பர்சன்டேஜ்' வசூல் வேட்டை!


''குண்டர்களின் ரவுடியிசம், மறுபடியும் தலைதுாக்குது வே...'' என, அரட்டையை ஆரம்பித்தார்
அண்ணாச்சி.''எங்க ஓய்...'' என, விசாரித்தார் குப்பண்ணா.
''சென்னை, மேற்கு சைதாப்பேட்டை பகுதியில தான்... இங்க, ரியல் எஸ்டேட் தொழில் தகராறுல முன்னாடி துப்பாக்கிச் சூடு, குண்டு வீச்சு எல்லாம் நடந்துச்சு வே...
''சமீபகாலமா, மறுபடியும் ரவுடிகள் கொட்டம் அதிகமாயிட்டு... பொதுமக்கள், நிம்மதியா இருக்க முடியலை... ''அதனால, 'இந்த பகுதியில, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில ஈடுபடணும்'னு, போலீஸ் கமிஷனருக்கு, அந்த பகுதிமக்கள் புகார் அனுப்பியிருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
'வேலை செய்ற ஊருக்கே போகாம, ஒப்பேத்திட்டு இருக்காரு பா...'' என, அடுத்த விஷயத்திற்கு வந்தார் அன்வர் பாய்.''யாருங்க அது...'' என்றார்
அந்தோணிசாமி.''சேலம் மாவட்டத்துல இருக்கிற ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல, உளவுப்பிரிவு, எஸ்.ஐ.,யா இருக்கிறவரை தான் சொல்றேன்... இவர், குடும்பத்தோட, பக்கத்து ஊர் போலீஸ் குடியிருப்புல இருக்காரு பா...
''அங்க இருந்து பைக்குல, ௧௫ நிமிஷத்துல, அவர் வேலை பார்க்கிற ஸ்டேஷனுக்கு போயிடலாம்... ஆனாலும், குடியிருக்கிற ஊரை விட்டு நகராத, எஸ்.ஐ., போன்லயே தன் ஏரியாவுல இருக்கிற சிலரிடம் பேசி, உளவு தகவல்களை வாங்கி, அரசுக்கு அனுப்பிடுறார்...
''அதனால, அவரை மாத்தணும்னு, உயர் அதிகாரிகள் பரிந்துரை அனுப்பியிருக்காங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.
பெஞ்சுக்கு வந்தவரை பார்த்த அந்தோணிசாமி, ''வாங்க நந்தகுமார்... சங்ககிரியில இருந்து எப்ப வந்தீங்க...'' என, நலம் விசாரித்தார்.''கமிஷனையும் வாங்கிண்டு, வசைபாடறாங்க ஓய்...'' என, கடைசி தகவலுக்குள் நுழைந்தார்
குப்பண்ணா.''யாருங்க
அது...'' என்றார் அந்தோணிசாமி.''நாமக்கல் மாவட்ட, ஊரக வளர்ச்சித் துறையில அதிகாரியா இருக்கற லேடியைத் தான் சொல்றேன்... இவங்க வந்து, ௧௦ மாசம் தான் ஆறது... மத்திய, மாநில அரசுகளின் நிதியில சாலை, பாலம் போடுற வேலைகளுக்கு, 'பில் சேங்ஷன்' பண்றது தான் இவங்க வேலை ஓய்...
''இதுல, மத்திய அரசு நிதிக்கு, 2, மாநில அரசு நிதிக்கு, 3, தாய் திட்டத்துக்கு, 4 சதவீதம் கமிஷன் வெட்டினா தான், பில்லை கிளியர் பண்ணுவாங்க...''இப்படி கறாரா பைசா வசூலிச்சாலும், கான்ட்ராக்டர்களை தகாத வார்த்தைகள்ல பேசறதோட, அவமரியாதையாகவும் நடத்தறாங்க... இதனால, 'இவங்களுக்கு
பணத்தையும் குடுத்து, பேச்சும் வாங்க வேண்டியிருக்கே'ன்னு அவாள்லாம் புலம்பறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.''ஊருல இருந்து என் சித்தி மகள் பூங்கொடி வந்திருக்கா... கிளம்புதேன் வே...'' என்ற
படியே அண்ணாச்சி எழ, மற்றவர்கள் அரட்டை தொடர்ந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Giridharan S - Kancheepuram,இந்தியா

    சேலத்தில் ஒரு சம்பத் மாதிரி நாமக்கல்லில் ஒரு பூங்கொடியோ. நேரம் வரும் காத்திருங்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement