Advertisement

'டவுட்' தனபாலு

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ்: ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நிதிஷ் குமாரை, அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு கூட அழைக்காததில் இருந்து, பா.ஜ., தலைவர்களின் குணம் புரிந்திருக்கும்.


டவுட் தனபாலு: பீஹாரில், உங்களுடனான கூட்டணியை முறித்து, பா.ஜ.,வுடன் கைகோர்த்த நிதிஷ் குமாரை உசுப்பி விடப் பார்க்குறீங்க... ஒருவேளை, பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தால், 'அமைச்சரவையில் இடம் தராமல் ஏமாற்றிட்டாங்களே'ன்னு சொல்லி இருப்பீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை...!


சிவசேனா, எம்.பி., சஞ்சய் ராவத்:
நாங்கள் அதிகாரத்திற்கோ, அமைச்சர் பதவிக்கோ அலையவில்லை. அரசியல் காரணத்திற்காக, அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ளது. நாங்கள், உரிய நேரத்தில் உரிய முடிவை எடுப்போம்.


டவுட் தனபாலு: மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கீங்க... மஹாராஷ்டிர அரசிலும் இடம் பெற்று இருக்கீங்க... சமீபத்தில் நடந்த மும்பை மாநக ராட்சியை, பா.ஜ.,வின் தயவால் பெற்றீங்க... இந்த லட்சணத்தில், பதவி பற்று இல்லாத மாதிரி நடப்பது சரியா... வெளியில் இருந்து, பா.ஜ.,வுக்கு ஆதரவுன்னு, எக்காலத்திலும் உங்களால சொல்ல முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை...!



-பத்திரிகை செய்தி:
'அ.தி.மு.க.,விற்குள் குழப்பம் விளைவிக்க முயற்சிக்கும் தினகரன், திருமங்கலம் தொகுதிக்குள் நுழைய முடியுமா' என, வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரின் ஆதரவாளர்கள் சவால் விட்டுள்ளனர்.


டவுட் தனபாலு: 'தி.மு.க., ஆட்சியில், மதுரையில், சட்டம் - -ஒழுங்கு யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது... ஸ்டாலினால், அங்கு காலெடுத்து வைக்க முடிந்ததா'ன்னு, இவ்வளவு நாளும் கேட்டு வந்த, அ.தி.மு.க.,வினர், நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் கிடையாது என்பதை காட்ட நினைக்குறாங்களோ என்ற, 'டவுட்' வருதே...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement