Advertisement

அக்கம் பக்கம்

புலம்பும் ராமையா!



'நான்கு ஆண்டுகள் தாக்குப் பிடித்து விட்டோம்; இன்னும் ஓர் ஆண்டை, எப்படியாவது ஓட்டிவிட வேண்டும்' என்ற, லட்சியத்துடன், கர்நாடக முதல்வர் நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார், காங்கிரஸ் மூத்த தலைவர், சித்தராமையா.ஆனால், அந்த லட்சியம், அத்தனை சுலபமாக நிறைவேறாது போலிருக்கிறது. இவரை, முதல்வர் பதவியிலிருந்து கவிழ்க்க, கர்நாடக மாநில, காங்., தலைவர்கள் பலர், அவ்வப்போது, உள்ளடி வேலை பார்த்து வருகின்றனர்.'நான் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவன்; அதனால் தான், இந்த பதவியில் நீடிக்க முடிகிறது' என, தன் நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்தார், அவர்.சமீபகாலமாக நடக்கும் விஷயங்களால், 'மீதமுள்ள பதவிக் காலத்தையும் வெற்றிகரமாக கடந்துவிட முடியுமா' என்ற சந்தேகம், அவருக்கு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கியிருந்தார், சித்து. கார், வாங்கப்பட்ட சில நாட்களிலேயே, அதன் மீது, ஒரு காகம் அமர்ந்திருந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்தார்.'காகம் உட்கார்ந்த கார், உருப்படாது' என நினைத்து, அந்த காரை விற்று, வேறு கார் வாங்கினார். அடுத்த சில நாட்களிலேயே, அவரது அலுவலகத்தின் வெளியில் ஆந்தை அமர்ந்திருந்ததாக ஊழியர்கள் கூறவே, விரக்தியின் உச்சிக்கே சென்றுள்ளார், சித்தராமையா.'நடப்பது எதுவுமே சரியில்லையே; நம் பதவி நீடிக்காதோ' என, புலம்புகிறார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement