Advertisement

பக்க வாத்தியம்

'நாம தான் இளிச்சவாயர்கள்!'

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், செஞ்சி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம், சமீபத்தில் நடந்தது.கூட்டம், காலை, 11:00 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சமூக தணிக்கை அலுவலர்கள் உட்பட, அனைவரும் வந்து விட்டனர். ஆனால், கூட்டத்தை ஒளிப்பதிவு செய்ய வேண்டிய கேமரா மேன், குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால், கூட்டம் துவங்குவது தாமதமானது.
இதையடுத்து, கூட்டத்தில் இருந்த, தொழிலாளர்கள் இருவர், 'இதற்கு முன் ஊராட்சியில் நடைபெறும் கூட்டத்திற்கு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தாமதமாக வந்தாங்க... அவங்களுக்காக காத்திருந்தோம். ஆனால் இப்போ, அவங்கெல்லாம் வந்துட்டாங்க... கேமரா மேனுக்காக காத்திருக்க வேண்டி இருக்கு... ஆக மொத்தம், நாம தான் இளிச்சவாயர்கள்...' என, நொந்தபடி கருத்துப் பரிமாறிக் கொண்டனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement