Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி: அரியலுார் மாணவி அனிதா, தைரியமும், திறமையும் உள்ளவர். அவர், எம்.பி.பி.எஸ்., சீட் கிடைக்கா விட்டால், விவசாயம் படிப்பேன் என, தொலைக்காட்சி பேட்டியில் கூறினார். அவரை, தற்கொலைக்கு துாண்டியவர் யாராக இருந்தாலும், தண்டிக்கப்பட வேண்டும். ஜாதியை வைத்து அரசியல் செய்பவர்களை,
மக்களிடம் அடையாளம் காட்டுவோம்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி: உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியும், மருத்துவர் கனவு தகர்ந்ததால், அனிதா தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. அவர் மரணத்தில் மர்மம் உள்ளது. அனிதாவின் மரணம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் அறிக்கை: அரசு பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு
களுக்கு, 11ம் தேதி காலாண்டு தேர்வு நடக்க உள்ளது. மாணவர்களை தயார்படுத்த, ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால், 7ம் தேதி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். அரசு, அவர்களை அழைத்து பேச வேண்டும். வேலை நிறுத்தத்தை தவிர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி: புதுச்சேரியில், 'ப்ளூ வேல்' விளையாட்டை மாணவர்கள் விளையாடுகின்றனரா என, சைபர் கிரைம் போலீசார், கண்காணிக்க உத்தரவிட்டுள்ளேன். அதை விளையாடுவோர் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல், வெளியில் வரவேண்டும். மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை தடுக்க, சட்டம் கொண்டு வரப்படும்.

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை: வேலைக்கு செல்லும் பெற்றோர், குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதில்லை. ஸ்மார்ட் போன்களின் வழியே, ப்ளூ வேல் போன்ற சாத்தான்கள், குழந்தைகளுக்குள் நுழைந்து, அவர்களின் மனதையும், உடலையும் கெடுக்கின்றன. இதில், போனையும், குழந்தைகளையும் குறைகூறி பயனில்லை; பெற்றோரிடமும் தவறு உள்ளது.

'ஒரு பக்கம், தி.மு.க.,வோட நட்பா இருக்கீங்க... மறுபக்கம், அ.தி.மு.க., அரசுக்கும் வக்காலத்து வாங்குறீங்க... உங்க அரசியல் வியூகம் தான் என்ன' என, கேட்க தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி:

'நீட்' தேர்வில், தமிழகத்திற்கு விலக்கு கிடைக்காததற்கு மத்திய அரசே காரணம். தமிழக அரசு முடிந்த வரை, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற போராடியது. ஆனால், மத்திய அரசு, வழக்கம் போல் தமிழகத்தை வஞ்சித்து, துரோகம் இழைத்து விட்டது. இதற்காக போராடிய மாணவி அனிதா, தற்கொலை செய்து கொண்டது மிகவும் வருந்தத்தக்கது. அதற்கு, மத்திய அரசே முழுமையான காரணம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    வைகோ மிகுந்த குழப்பத்தில் இருப்பதால் இனி பேசாமல் இருப்பதே நல்லது.

  • Rangaraj - Coimbatore,இந்தியா

    ராமரை வைத்து அரசியல் செய்பவர்களும் சாதியை. வைத்து அரசியல் செய்பவர்களும் ஒன்றுதான் இதிகாச கதாநாயகன் இன்று அரசியல்வாதிகளின் பகடை ஆனா பரிதாபம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement