Advertisement

'டவுட்' தனபாலு

லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை: அ.தி.மு.க.,வில் பிளவு இல்லை; ஒற்றுமையாக இருக்கிறோம். விரைவில் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.

டவுட் தனபாலு: மூணு மாசமா இதைத்தான் சொல்லி வந்தீங்க... கடைசியில், சொன்னபடி, பழனிசாமி-, பன்னீர் அணிகள் இணைஞ்சிடுச்சு... இப்போ நீங்க, தினகரன் தரப்பும் உங்களோடு இணைந்திடும்னு சொல்றீங்க... பன்னீர் இதற்கு ஒத்துக்குவாரா... தினகரன் குறித்து, சமீபகாலமா பன்னீர்செல்வம் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருப்பதும், 'டவுட்'டை கிளப்புதே...!

காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்: மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில், அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுமானால், கட்டாயம், பிரதமரையும் மாற்ற வேண்டும். மக்களுக்கு அளித்த ஒரு வாக்குறுதியை கூட, பிரதமர் நரேந்திர மோடி
நிறைவேற்றவில்லை.

டவுட் தனபாலு: நாங்க, மத்தியில் ஆட்சியில் இருந்த போது, கூட்டணி கட்சிகளின் நெருக்குதலுக்கு உடன்பட்டு, அமைச்சர் பதவிகளை கொடுத்தோம்... அவர்கள் என்ன செய்த போதிலும்,
தட்டிக்கேட்க முடியாத நிலையில் இருந்தோம்... இப்போ மோடி, இவ்வளவு சுதந்திரமாக நடவடிக்கை எடுக்குறாரே என்ற விரக்தியின் வெளிபாடு தான் இதுவோ என்ற, 'டவுட்' வருதே...!

பா.ஜ.,வைச் சேர்ந்த, பீஹார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி: பீஹாரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். லாலு ஆட்சி காலத்தில், அடிப்படை கட்டமைப்புகளில் கவனம் செலுத்தாததே, இதற்கு காரணம்.

டவுட் தனபாலு: கூட்டணி தர்மத்துக்காக, சப்பைக்கட்டு, ஓரளவுக்குத்தான் கட்டணும்... 2005ல இருந்து, இன்னைக்கு வரை, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் தான், பீஹாரின் முதல்வரா இருக்காரு... அப்படீன்னா, 12 வருஷங்கள்ல, கட்டமைப்பை பலப்படுத்த எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கலையா என்ற, 'டவுட்' எழுதே...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement