Advertisement

ஆடினோமே...கொண்டாடினோமே.

ஆடினோமே...கொண்டாடினோமே.

நாட்டின் 71வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் குதுாகலமாக கொண்டாடப்பட்டது.
தலைநகர் டில்லியில் பிரதமர் எழுச்சி உரை நிகழ்த்திவிட்டு இறங்கிய போது அவரைச் சூழ்ந்து கொண்ட பள்ளிக்குழந்தைகளின் சந்தோஷம் நாட்டின் சுதந்திர தின சந்தோஷத்தை எதிரொலித்தது.

அகமதாபாத்தில் 300 மீட்டர் நீளத்திற்கான சுதந்திதின கொடியினை ஊர்வலமாக கொண்டுவந்தனர் ஒரு பாலத்தின் நீளத்திற்கு நீண்டிருந்தது நம் தேசக்கொடி.
சுதந்திர தினம்என்றால் விடுமுறை சினிமா கேளிக்கை என்றுதான் இளைஞர்கள் இருப்பார்கள் என்பதை பொய்யாக்கும் விதத்தில் டில்லியில் இளைஞர்கள் சுதந்திர தின கொடியேந்த நகர் முழுவதும் வலம்வந்தனர்.

மதுரையில் மல்லர்கம்ப விளைாட்டில் சாகசம் காட்டிய இளைஞன் தன் சாகசத்திற்கு துணையாக முகத்தில் வரைந்து கொண்டது நம் மூவர்ணக்கொடியே.
கோல்கத்தாவில் சுதந்திர தினவிழாவில் பங்கேற்றவர்களைவிட பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்களில் ஒரு சிறுமி தன் நெற்றியில் இட்டிருந்த கொடியும்,முஸ்லீம் பெண் ஓருவர் தன் குழந்தைக்கு அணிவித்திருந்த மூவர்ண உடையும் அருமையாக இருந்தது.

இப்படி நாடு முழுவதும் மக்கள் எழுச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடிய சுதந்திரதின விழாவிற்கு ஈடேது இணையேது.

-எல்.முருகராஜ்

-murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement