Advertisement

மாற்றுத்திறானாளிகளுக்கு ம(று)ணவாழ்வு

மாற்றுத்திறனாளிகளின் மணவாழ்வுக்கு வழிகாட்டும் பஞ்சாபகேசன்.

நா.பஞ்சாபகேசன்

மனம் நிறைய மனித நேயம் கொண்டவர்,துப்புரவு தொழிலாளர்களுக்கு அவ்வப்போது விருந்து படைத்து அவர்களை கொண்டாட்டத்தில் மகிழ்பவர்,திருமணம் என்பது சமூக கடமை அது அனைவருக்கும் நடந்திட வேண்டும், அது அதுவாக நடந்திடாது நாம்தான் நடத்திடவேண்டும் என்பதற்காக சென்னையில் சென்னை சாயி சங்கரா மேட்ரிமோனியல் என்ற திருமண மையத்தை துவக்கி ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடக்க காரணமாக இருந்தவர், இருப்பவர்.

கடந்த கால அனுபவத்தில் இவர் கற்றதும் பெற்றதுமான ஒரு விஷயம் உண்டு.

எல்லோருக்கு வாழ்க்கையில் பிரச்னை உண்டு ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்க்கையே பிரச்னைதான்.அவர்களுக்கு அவ்வளவு எளிதில் திருமணம் நடைபெறுவதில்லை ஆனால் அவர்களுக்குதான் அவசியம் திருமணம் நடைபெறவேண்டும் ஏனேனில் அன்பும் ஆறுதலும் துணையும் மற்றவர்களை விட அவர்களுக்கே அதிகம் தேவை இருந்தும் இவர்களது கல்யாண கனவு கனவாகவே இருந்துவிடுகிறது.

இவர்களின் இந்த கனவை நனவாக்க முடிவு செய்து சமீபத்தில் இவர் துவக்கியுள்ளதுதான் சென்னை சாயி துணை மேட்ரிமோனியல்ஸ் (www.saithunaimatri.com) முழுக்க முழுக்க இலவசமாக, முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த இணையதளத்தை பார்ப்பதும் பதிவதும் சுலபமான விஷயமாகும்.

மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்ய விரும்புபவர்களும் இந்த இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.இதை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதற்காக நிறைய விதிமுறைகளும் உண்டு.ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து இதைக் கண்காணித்து நடத்திச் செல்கிறார்.

பேசுவதில்,கேட்பதில்,நடப்பதில்,பார்ப்பதில்,புரிந்துகொள்வதில் என்று ஐந்து சதவீதத்தினருக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் திருமண ஏக்கத்துடன் இருக்கின்றனர் இவர்கள் தங்களுக்கு தேவையான,தகுதியான இணையை தேடிப்பார்த்து மணந்து கொள்ள இந்த இணையதளம் பெரிதும் பயன்படும்.இதில் சாதி மத பேதமில்லை.

மாற்றுத்திறனாளிகள் இருவர் திருமணம் செய்து கொண்டால் பிறக்கும் குழந்தைகளும் மாற்றுத்திறனாளியாக இருக்கும் என்பது போன்ற மூட நம்பிக்கையை உடைத்தெறியும் வகையில், குறைகளற்ற குழந்தைகள் பெற்று சமூகத்தில் சந்தோஷமாக குடும்பம் நடத்திவரும் பல மாற்றுத்திறனாளி தம்பதிகளை மேடேயேற்றி இணையதள துவக்க நாளன்று திருமணம் செய்து கவுரவித்தார்.

மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுதான் போராட்ட களமாகிவிட்டது அவர்களது மணவாழ்வாவது சந்தோஷ அலை வீசும் பூக்கோளமாக மாற்றுவதற்கு நாம் உதவலாம், அவர்களுக்கான இந்த இணையதளத்தை பற்றிய செய்தியை அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வோம், இதன் மூலம் அவர்களுக்கு உதவிய மனநிறைவுடன் புண்ணியமும் சேர்ந்து கொள்ளும்.

பஞ்சாபகேசன் மேலும் பேசுகையில்...

மாற்றுத்திறனாளிகள் எத்தகைய வரனை தேர்ந்தெடுக்கவேண்டும் எப்படிப்பட்ட குறைகளை ஏற்றுக்கொள்ளலாம் என்பதில் தெளிவுடன் இருத்தல் வேண்டும்,வரன்களின் நம்பகத்தன்மையை நன்கு உறுதி செய்துகொள்ள வேண்டும்.தனது மகன்/மகளின் குறைபாடுகளை தெளிவாக விளக்கி அதனை மனதார ஏற்றுக் கொள்ளும் வரனையே தேர்வு செய்தல் வேண்டும்.

மணமக்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பொருந்திப்போனாலே போதுமானது ஜாதகப்பொருத்தம் தேவையில்லை, இருவேறு ஜோதிடர்கள் ஒத்துப்போகாத போது அவர்களது கருத்துக்கு நாம் ஏன் பலியாகவேண்டும்.பொருத்தங்கள் பார்ப்பதால் கிடைக்கும் நல்ல வரன்களையும் நழுவவிட்டு பின்னர் புலம்புவதால் எவ்வித பயனும் இல்லை.எடுக்கும் முடிவுகளை பிறர் மனம் புண்படாத வகையில் உடனுக்குடன் தெரியப்படுத்துதல் வேண்டும்.தாமதங்களை நினைத்து வருத்தமோ,கவலைப்படுவதையோ தவிர்த்து தன்னம்பிக்கையுடனும் இறை நம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் செயல்படுதல் வேண்டும்.வாழ்க்கையே நம்பிக்கை நம்பிக்கையே வாழ்க்கை என்று சொல்லி முடித்துக்கொண்டார்.

இது தொடர்பாக கூடுதல் விவரத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்:7810981000,9840330531.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    மிக நல்ல சேவை. இவரது தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • Manian - Chennai,இந்தியா

    உடல் ஊனம் வேறு, உள்ள ஊனம் வேறு. இவர் தொண்டு ஆண்டவன் மூலம் மரபணு கோளாறுகளால் வருந்தும் சிலருக்கு இவர் மூலம் தரும் ஊன்று கோலாகும். இவர் பிறப்பு ஆண்டவன் தரும் ஊன்று கோலை உரியவரிடம் சேர்ப்பிப்பதே. அதை திறமையாக செய்கிறார். ஆண்டவன் அருள் இவருக்கு பரிபூர்ணமாக உண்டு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement