Advertisement

சொல்கிறார்கள்

மனமிருந்தால் மார்க்கமுண்டு!


இயற்கை வைத்தியத்தால் ஆரோக்கியமாக இருப்பது குறித்து கூறும் கண்ணன்: புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த நான், வீடியோ கடை வைத்துள்ளேன். என் தந்தை, தாத்தா இருவருமே சித்த மருத்துவர்கள். அதனால் நான், சிறுவயதில் இருந்தே, மாத்திரை சாப்பிட்டதில்லை.
வலியைத் தாங்குவது கடினம் தான். ஆனால், சில நேரங்கள் தாங்கிக் கொண்டால், மருந்து, மாத்திரைகளைத் தவிர்த்து விடலாம்; அதனால், உண்டாகும் பக்க விளைவுகளில் இருந்தும் தப்பி விடலாம்.
சிறு பிரச்னைகளுக்கே மக்கள் பயந்து, நவீன மருந்து, மாத்திரைகளைத் தேடிப் போகின்றனர். ஆனால், அதற்கான தீர்வு, நம் வீட்டிலோ அல்லது வீட்டுப் பக்கத்திலேயோ இருக்கிறது.
வயிற்றில் பூச்சி வந்தால், வேப்பங்கொழுந்து அல்லது ஆவாரம் பூ அரைத்து சாப்பிட்டால் சரியாகும். பல் வலிக்கு மஞ்சள் துாளை பல்லில் வைத்தால், உடனடி நிவாரணம் தரும். இப்படி பலவற்றையும் நாமே சரி செய்து கொள்ளலாம்.
எல்லா ஜீவராசிகளும், கிடைக்கிற தண்ணீரைத் தான் குடிக்கிறது. ஆனால், நமக்கு மட்டும், தண்ணீரை மாற்றிக் குடித்தாலே, ஜலதோஷம் பிடித்து கொள்கிறது. காரணம், நம் உணவு பழக்க வழக்கம்.
நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியே அகற்றினால், நீண்ட ஆயுளோடு வாழ முடியும். முருங்கைக் கீரையை மட்டும் சமைத்து சாப்பிட்டால் போதும்; உடலில் உள்ள அனைத்து கழிவுகளும் வெளியேறி விடும். 2005ல் கர்ப்பம் தரித்த என் மனைவிக்கு, 10 மாதமும், ஒரு வேளை உணவும், அதிக அளவில் காய்கறி, பழம் மற்றும் கீரைகளையும் கொடுத்தேன்.
சத்துணவுக்காகவும், சுகப் பிரசவத்துக்காவும், பேரீச்சம் பழத்தை தேனில் ஊற வைத்துக் கொடுத்தேன். உறவினர்கள் திட்டினர்; ஆனாலும், நான் இயற்கையை நம்பினேன். மருத்துவமனை, மருந்து, மாத்திரைகளை
பயன்படுத்தவில்லை.மேலும், 15 நாளுக்கு ஒருமுறை, செம்மையான நிறத்தில் இருக்கிற வேப்பங்கொழுந்தை, மண் சட்டியில் இளங்சூட்டில், கருகாமல் முருகும் அளவுக்கு வறுத்தேன். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, சீரகம், மஞ்சள், இந்த கொழுந்தையும் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தேன்.
இந்த மருந்தால், பிறக்கும் குழந்தை எவ்வித நோயும் இல்லாமல், ஆரோக்கியத்தோடு பிறக்கும் என்ற நம்பிக்கை, வீண் போகவில்லை. என் மனைவிக்கு சுகப் பிரசவமாக, பெண் குழந்தை பிறந்தது; அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அவளுக்குப் பின்,
அதேமாதிரி ஒரு ஆண் குழந்தை.ஒரு நாளைக்கு நம் உணவில், 2,400 கலோரி இருந்தால் போதும். விதவிதமாக சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் நாம், இல்லாத பிரச்னைகளை உண்டாக்கி கொள்கிறோம். ஒரு கைப்பிடி பச்சரிசி, அரை மூடி தேங்காய், ஒரு கைப்பிடி கடலை, ஒரு டம்ளர் பால், இதில் ஒரு நாளைக்கு ஏதேனும் ஒன்றை மட்டும் சாப்பிட்டாலே போதுமானது; நமக்கு தேவையான கலோரி கிடைத்து விடும்.
நான் ஒரு வேளை மட்டுமே, உணவு உண்பேன். அதிகம் தண்ணீர் பருகுவேன். காய்கள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக சாப்பிடுவேன். இயற்கை முறைக்கு திரும்புவது கடினம் என்று நினைக்காமல், மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதை உணர்ந்து முயற்சி செய்தால், நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளலாம்; வந்ததையும் சுலபமாக குணப்படுத்தலாம்.
50 சதவீதம் லாபம் தரும் தொழில்!துணிகளை, 'டிரைவாஷ், ரோலர் பிரெஸ்' செய்து லாபம் சம்பாதிக்க வழிகளை கூறும், சென்னையை சேர்ந்த கனகவல்லி மற்றும் அவரின் மருமகள் நாகஜோதி:பட்டு மாதிரியான காஸ்ட்லியான துணிகளை, தண்ணீரில் நனைத்து துவைக்க யாரும் விரும்ப மாட்டார்கள்.வாங்கி சில முறை உடுத்திய பின், சேலையை துவைப்பதற்கும், பராமரிப்பதற்கும் பலரும் அலுத்து கொள்வர். இவ்வாறு அலுத்து கொள்பவர்கள், பராமரிப்பை கற்றுக் கொண்டால், உபயோகமாக இருப்பதுடன், அடுத்தவர்களுக்கும் செய்து கொடுத்து,சம்பாதிக்கலாம்.பட்டுப்புடவைகளுக்கு பாலிஷ் செய்து, புதுமெருகு ஏற்றி கொடுப்பது தான் எங்கள் பிரதான வேலை. அப்படி செய்து கொடுத்தபோது நிறைய பேர், 'புடவையில் உள்ள கறைகளை நீக்கி தர முடியுமா, கஞ்சி போட்டுக் கொடுக்க முடியுமா' என, கேட்க ஆரம்பித்தனர்.
பாலிஷுக்கு கேட்பவர்களை விடவும், இவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், கறை எடுத்து டிரை வாஷ் செய்யவும், ரோல் பிரெஸ் முறையில கஞ்சி போட்டு இஸ்திரி செய்து கொடுக்கவும் கற்று, செய்து வருகிறோம்.டிரை வாஷ் என்பது, தண்ணீரில் துணியை முக்கியெடுக்காமல் சுத்தம் செய்வது; தண்ணீரே படாமல் அதில் உள்ள அழுக்கு, கறைகளை நீக்கி கொடுக்கிற முறை. சில துணிகளை முதன் முறை தண்ணீரில் நனைத்தால் சுருங்கிப் போய் விடும்; சாயம் போகும். டபுள் கலர் புடவைகளாக இருந்தால், ஒன்றோடு ஒன்று கலந்துவிடும்.
டிரை வாஷ் முறையில் இந்த பிரச்னை இல்லாமல் புது மெருகு ஏற்றலாம். சுடிதார், கோட், சூட் என, எல்லாவற்றையும் டிரை வாஷ் பண்ணலாம். பட்டு, மைசூர் சில்க், காட்டன், கம்பளி, ஜூட், ஷிபான் என, எல்லா துணி வகைகளுக்கும் டிரை வாஷும், ரோலிங்கும் செய்து கொடுக்கலாம். மஞ்சள் கறையை தவிர, மற்ற எந்தக் கறையையும் டிரை வாஷ் முறையில் எடுக்க முடியும்.
ரோல் பிரெஸ் என்பது, கிட்டத்தட்ட இஸ்திரி செய்வது மாதிரி தான். சாதாரணமாக இஸ்திரி செய்யும்போது சில வகை துணிகள் சூடுபட்டு சுருங்கி விடும்; சில பொசுங்கி விடும். ரோல் பிரெஸ்சில் அப்படி எதுவும் இல்லாமல் ஒரே சீராக இருக்கும். அதுமட்டுமின்றி, இஸ்திரி செய்தால் ஒருமுறை தான் அணிய முடியும்; ரோல் பிரெஸ் பண்ணினால் மூன்று முறை அணியலாம்.
புடவை பிரியர்கள் இந்த இரண்டையும் கற்றுக் கொண்டால், உபயோகமாக இருக்கும். 10க்கு, 10 இட வசதி, ரோல் பிரெஸ் செய்ய தேவையான கட்டை மற்றும் கம்பி, கறை நீக்கும் பொருட்கள் எல்லாம் சேர்த்து மொத்தமாக, 35 ஆயிரம் ரூபாய் முதலீடு தேவைப்படும். துணிகளையும், நிழலிலேயே உலர வைக்கலாம்.சுடிதார் செட் ஒன்றுக்கு டிரை வாஷ் மற்றும் ரோல் பிரெஸ் செய்து கொடுக்க, 150 ரூபாய் கட்டணம் வாங்கலாம். ஸ்டோன் வொர்க் செய்த கனமான சேலை மற்றும் உடைகளுக்கு, 900 ரூபாய் வரை கூட வாங்க முடியும். 50 சதவீதம் லாபம் தரும் தொழில் இது. டிரை வாஷ் மற்றும் ரோல் பிரெஸ் செய்ய, இரண்டு நாட்கள் பயிற்சியும் அளித்து
வருகிறோம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • ARUL - TRICHY,இந்தியா

    உங்கள் தொலைபேசி எண்ணை தெரிவியுங்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement