Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
'தங்க அரிசி' ஆராய்ச்சிகள்
தலையைச் சுற்றி மூக்கை தொடுவது போல எனக் கூறுவார்கள். அதுபோல விவசாயத்துறை யின் நடவடிக்கை அமைந்துள்ளது. மஞ்சள் நிறமுள்ள தானியமான கம்பில் பீட்டா கரோட்டீன் அதிகம் உள்ளது. 'வைட்டமின்- ஏ'- வை உருவாக்க முக்கிய காரணி, பீட்டா கரோட்டீன். வைட்டமின்- ஏ ஆரோக்கியமான தோலுக்கும், கண் பார்வைக்கும் தேவை. பீட்டா கரோட்டீன் உள்ள கம்பை பரவலாக்குவதை தவிர்த்து, நாம் அரிசியில் பீட்டா கரோட்டீனை ஏற்றுவதற்காக ஆராய்ச்சிகள் செய்து 'தங்க அரிசி'யை உருவாக்க, அதனை பரவலாக்க விவசாயத்துறை அதிக பணத்தை செலவிடுகிறது.
தகவல் சுரங்கம்
குஜராத் குடும்பப் பெயர்கள்
இந்தியாவின் வட மாநிலங்களைப் போல, குஜராத்தியர்களும் பெயரை விட, குடும்பப் பெயருக்கே முக்கியத்துவம் தருகின்றனர். பட்டேல், வைத்யா, நந்தா, தேசய், வகேலா,ஜோஷி, ஓசா, ருபானி, திரிவேதி, மோதி, காந்தி, பாண்ட்யா போன்ற குடும்பப் பெயர்கள் அங்கு பரவலாக உள்ளன. இவை அவர்களின் ஜாதியை அறியும் வகையில் உள்ளன. சாராபாய், அம்பானி போன்ற குடும்பப் பெயர் உடையவர்கள், குஜராத்தில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உள்ளனர். வியாபாரம் செய்யும் வம்சத்தினரின் குடும்பப் பெயர் 'அம்பானி'. வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் வம்சத்தினரின் குடும்பப் பெயர் குஜராத்தில் 'ஷா'.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement