Advertisement

டீ கடை பெஞ்ச்

ஒன்றிய செயலர் பதவிக்கு வேட்டு வைக்கும் எம்.எல்.ஏ.,


''சட்டசபையை கலைக்குற அதிகாரம், யாருக்கு இருக்கு வே...'' என்ற கேள்வியுடன், பெஞ்சுக்கு வந்தார் அண்ணாச்சி.
''இது தெரியாதா... ஜனாதிபதிக்கு தான், அந்த அதிகாரத்தை கொடுத்திருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''போன ஞாயிற்று கிழமை, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 ஏ தேர்வு நடந்துச்சுல்லா... ஏழரை லட்சம் பேர், எழுதினாவ... இதுல, பொது அறிவு பகுதியில, 'மாநில சட்ட
சபையை கலைக்குற அதிகாரம் கவர்னருக்கு உண்டா'ன்னு கேள்வி கேட்டிருந்தாவ வே...
''அதுக்கான விடையா, 'ஆம்; இல்லை; பரிந்துரைக்க மட்டுமே முடியும்; ஜனாதிபதியால் மட்டுமே கலைக்க முடியும்'னு நாலு பதில்கள் கொடுத்திருந்தாவ...
''ஏற்கனவே, தமிழக அரசு, ஆயிரத்தெட்டு பிரச்னைகள்ல சிக்கி தவிக்குது... இந்த நேரத்துல, இப்படி வந்த கேள்வியை பார்த்து, தேர்வர்கள் அதிர்ச்சி ஆகிட்டாவ... 'ரிசல்ட் வர்ற வரைக்குமாவது, இந்த அரசு இருக்குமா...'ன்னு சிலர் புலம்பிட்டே வீட்டுக்கு போனாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''பேச்சாளர்களிடம் புகைச்சல் ஆரம்பிச்சிருக்கு பா...'' என, அடுத்த விஷயத்திற்கு வந்தார் அன்வர்பாய்.
''எந்த கட்சியில ஓய்...'' என்றார் குப்பண்ணா.''த.மா.கா., சார்புல, 'டிவி' விவாதங்கள்ல, ஞானதேசிகன், விடியல் சேகர், அனுராதா அபின்னு ஒரு சிலர் கலந்துக்குறாங்க...
''அந்த கட்சியில, இன்னும் நல்லா பேசக்கூடிய நபர்கள் நிறைய பேர் இருக்காங்க... ஆனா, அவங்களுக்கு வாய்ப்பு தராததால வருத்தத்துல இருக்காங்க... அதனால, நல்ல பேச்சாளர்களை தேர்வு செஞ்சு, அவங்களை, செய்தி தொடர்பாளர்களா நியமிக்க, வாசன் முடிவு செஞ்சிருக்காரு பா...'' என, விளக்கி முடித்தார் அன்வர் பாய்.
''ஒன்றிய செயலரை மாத்த, காய் நகர்த்திட்டு இருக்காருங்க...''
என, கடைசி விஷயத்திற்கு வந்தார் அந்தோணிசாமி.''எந்த கட்சியில வே...'' என கேட்டார் அண்ணாச்சி.''திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., மகேஷ் பொய்யாமொழிக்கும், தெற்கு ஒன்றிய செயலர் நவல்பட்டு விஜிக்கும் பனிப்போர்
நடக்குதுங்க...''விஜி ஏரியாவுல இருக்கிற துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்களுக்கு ஆதரவா போராட்டம் நடத்த, மகேஷ் முடிவு பண்ணியிருக்கார்... இதை, மாவட்ட செயலர்
நேருவிடம் சொல்லி
இருக்காரு...''இது பத்தி, விஜியிடம் நேரு கேட்க, அவரோ, 'என்கிட்ட, எம்.எல்.ஏ., எதுவும் சொல்ல மாட்டேங்கிறார்'னு புலம்பியிருக்காரு... அதோட, போராட்ட ஏற்பாடுகள்லயும், விஜி ஆர்வம் காட்டலைங்க...
''இதனால, கடுப்பான மகேஷ், விஜியின் ஒன்றிய செயலர் பதவியை பறிக்க, தலைமைக்கு புகார்களை தட்டச் சொல்லி இருக்காருங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
-----அரட்டை, வேறு பாதையில் பயணித்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement