Advertisement

அக்கம் பக்கம்

இப்படி செய்யலாமா?


பஞ்சாப் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, அமரீந்தர் சிங், கட்சியின் துணை தலைவர் ராகுல் மீது, கடும் கோபத்தில் இருக்கிறார்.'என்ன இருந்தாலும், நான் ஒரு மாநிலத்தின் முதல்வர்; காங்கிரசின் தீவிர விசுவாசி; என்னிடமே இப்படி நடந்தால் எப்படி...' என, சக கட்சி நிர்வாகிகளிடம் பொறுமுகிறார், அவர்.பஞ்சாபில் உள்ள பாட்டியாலா ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் அமரீந்தர். பஞ்சாபில், காங்கிரசுக்கு நெருக்கடி வரும்போதெல்லாம், தொண்டர்களை சோர்வடைய விடாமல், திறமையாக கட்சி பணியாற்றியவர்.இவரது தாய், சமீபத்தில் காலமானார். அவருக்கு, ஐந்தாவது நாள் காரியம், பாட்டியாலாவில் உள்ள அமரீந்தரின் வீட்டில் நடந்தது.இதற்கு, உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் அனைவரும் வந்திருந்தனர். எதிர்க்கட்சியான, பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில தலைவர்களும்
வந்திருந்தனர்.ஆனால், அமரீந்தர் மிகவும் எதிர்பார்த்த ராகுல், இந்த நிகழ்வுக்கு வரவில்லை. இதனால், அமரீந்தர், சோகத்தில் ஆழ்ந்தார்.'என் தாயும், காங்கிரஸ், எம்.பி.,யாக இருந்தவர் தான். இந்த கட்சிக்காக, எங்கள் குடும்பம் எவ்வளவு உழைத்துள்ளது; இப்போது, அந்த உழைப்பெல்லாம் வீணாகி விட்டதே... என் வீட்டு, சுக துக்கங்களுக்கே வராத, ராகுல், சாதாரண தொண்டர் வீட்டுக்கெல்லாம், எப்படி வருவார்; இப்படி இருந்தால், கட்சி, எப்படி வளரும்' என, புலம்பி வருகிறார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement