Advertisement

பக்க வாத்தியம்

'வெளியில் வீரர்; வீட்டில் சரண்டர்!'



மதுரையில், கட்சி நிர்வாகி, ரஞ்சித்குமார் இல்ல விழாவில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பங்கேற்றார்.அவர் பேசும் போது, 'ரஞ்சித்குமார் மகன்களுக்கு, 'ஆதித்த கரிகாலன், வெண்தேர் செழியன்' என பெயரிட்டேன். அதை, 'ரிக் ஷித் வர்மன், ரன்வீர் வர்மன்' என, மாற்றி விட்டார்.'இனி, அவர் ஒடிசா, பீஹார், உ.பி., மாநிலங்களுக்கு சென்று விட வேண்டியது தான். இப்பெயர்கள் வாயில் நுழையவில்லை. இதற்கெல்லாம் காரணம், பெண்கள் தான். காலத்திற்கு ஏற்ப, பெயரை மாற்றி வைக்க சொல்லி இருப்பர். அதை அப்படியே ரஞ்சித்குமார் ஏற்று விட்டார். வெளியில் தான் வீரர்; வீட்டில் சரண்டர்.
'எனவே, ரஞ்சித்குமார் வீட்டின் அடுத்த விழாவில் நான் கலந்து கொள்ள வேண்டுமானால், நான் வைத்த பெயர்களை மீண்டும் அவர், தன் மகன்களுக்கு வைக்க வேண்டும்' என்றார்.இதைக் கேட்டு, ரஞ்சித்குமாரும், அவரது குடும்பத்தினரும் நெளிந்தனர். திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் ஒருவர், 'ரஞ்சித் தான் ஏதோ நிர்ப்பந்தத்துல செஞ்சிட்டார்ன்னா, அதில் தலையிடாம, 'டீசன்ட்'டா இருக்கறதை விட்டுட்டு, வைகோ, அலப்பரை செய்யிறாரே...' என, நொந்து கொண்டார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement