Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
தேனீ வளர்ப்பு ஆராய்ச்சி மையம்
தேன் உற்பத்தியை ஊக்குவிக்க, மத்திய தேனீ வளர்ப்பு ஆராய்ச்சி மையம் புனேயில் செயல்படுகிறது. இங்கு தேனீ வளர்ப்பு, தேன் சேகரிப்பு, தேன் வர்த்தகம் குறித்த அருங்காட்சியகம் உள்ளது. இதன் சார்பில் தேனீ வளர்ப்பு குறித்த டிப்ளமோ, குறுகிய காலப் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. கதர் கிராமக் கைத்தொழில்கள் ஆணையத்தின் சார்பில், இந்த ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. இந்தியா போன்ற விவசாய நாட்டில் தேனீ வளர்ப்பை ஊக்குவித்தால், அது தேன் சேகரிப்புக்கு மட்டுமின்றி, அயல் மகரந்தச் சேர்க்கையினால் விவசாய உற்பத்தியும் அதிகரிக்கும் என இம்மைய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தகவல் சுரங்கம்
இர்வின் பிரபுவும் இந்தியா கேட்டும்
சுதந்திரதின விழாவில் இந்தியா கேட் முக்கியத்துவம் பெறுகின்றது. இது முதலில் போர் நினைவுச் சின்னம் என்றழைக்கப்பட்டது. முதல் உலகப்போரில் பிரான்ஸ், மெசபடோமியா, ஈரான், கிழக்கு ஆப்பிரிக்கா பகுதிகளில் உயிரிழந்த 82 ஆயிரம் பிரிட்டிஷ் இந்தியப் படைவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டது. சர் எட்வின் லிட்டன் என்ற லண்டனைச் சேர்ந்த பொறியாளர் இதனை வடிவமைத்தார். 'ட்யூக் ஆஃப் கன்னாட்' என்றழைக்கப்பட்ட ஆங்கிலேயே இளவரசரால் 1921ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1931ல் 'இர்வின் பிரபு' ஆட்சி காலத்தில் இந்த இந்தியா கேட் கட்டுமானம் முடிக்கப்பட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement