Advertisement

டீ கடை பெஞ்ச்

விருந்து கணக்கில் மின் வாரிய அதிகாரிகள், 'கோல்மால்!'



''ஜாதி சங்க தலைவர்களை, சந்திக்க திட்டமிட்டிருக்காருங்க...'' என, விவாதத்தை ஆரம்பித்தார்
அந்தோணிசாமி.''யாரு பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, வர்ற, ௨௨ம் தேதியில இருந்து, தமிழகத்துல, மூணு நாள் சுற்றுப்பயணம் செய்ய போறாருங்க...''சென்னை, கலைவாணர் அரங்கத்துல, ஒரு நாள் நடக்குற நிகழ்ச்சியில, வன்னியர், நாடார், முத்தரையர், யாதவர்னு, 25க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட ஜாதி சங்கங்களின் தலைவர்களை சந்திச்சு பேச இருக்காருங்க...
''அப்ப, ஜாதி சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம்னு வாக்குறுதி கொடுக்க இருக்காருங்க...'' என, முடித்தார்
அந்தோணிசாமி.
''பட்டினி போட்டு, சாவ அடிக்காவளேன்னு புலம்புதாவ வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.
''அடப்பாவமே... புலம்பறது யார் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.''ராணுவத்துக்கு ஆட்கள் சேர்க்குற முகாம், தஞ்சாவூர்ல, ௨ம் தேதி ஆரம்பிச்சு, இன்னைக்கு வரைக்கும் நடக்கு... முகாமுக்கு வர்ற ராணுவ அதிகாரிகளின் வாகனங்களை ஓட்டுறதுக்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலக டிரைவர்களை கூப்பிட்டிருக்காவ வே...
''அவங்களும், அதிகாலையிலேயே அதிகாரிகளை அழைச்சிட்டு வந்து, முகாம்ல விடுதாவ... அங்கே, ராணுவ அதிகாரிகள், ஊழியர்களுக்கு சாப்பாடு தயாரிச்சு குடுக்குறவங்க, டிரைவர்களுக்கு
தர்றதில்லை வே...''அதே நேரம், டிரைவர்கள் வெளியே போய் சாப்பிட்டு வர்றோம்னா, அதுக்கும் அனுமதிக்கிறது இல்லை... இதனால, அவங்க பட்டினியில வாடுதாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''செலவு விவகாரத்துல சிக்கிட்டாங்க பா...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் அன்வர் பாய்.
''யாரை சொல்றீங்க...'' என்றார் அந்தோணிசாமி.''மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல், சமீபத்துல, சென்னை வந்தார்... பிரபல நட்சத்திர ஓட்டல்ல, தமிழக மின் வாரிய செயல்பாடுகள் சம்பந்தமா, உயர்
அதிகாரிகளுடன் ஆலோசனை
நடத்தினாரு பா...''அவருக்கு, அங்கேயே மதிய விருந்துக்கு ஏற்பாடு பண்ணியிருந்தாங்க... ௪௦ ஆயிரம் ரூபாய்க்குள்ள விருந்து செலவை முடிக்க, வாரிய
அதிகாரிகள் திட்டமிட்டிருந்தாங்க... ஆனா, ௭௮ ஆயிரம் ரூபாய்க்கு, 'பில்' வந்துடுச்சு பா...''இது பத்தி, வாரிய உயர் அதிகாரிகள் விளக்கம் கேட்டப்ப, 'பியுஷ் கோயலை சந்திக்க, பா.ஜ., தலைவர் தமிழிசையும் வந்திருந்தாங்க... அவங்க கூட வந்திருந்த கட்சியினரும் சாப்பிட்டதால, செலவு அதிகமாயிடுச்சு'ன்னு கீழ்மட்ட அதிகாரிகள் சமாளிச்சுஇருக்காங்க பா...
''ஆனா, அடிக்கடி இந்த மாதிரி நடக்குறதால, உயர் அதிகாரிகள், துருவி துருவி
விசாரிச்சிட்டு இருக்காங்க பா...'' என, முடித்தார் அன்வர் பாய்.நாளிதழ்களை புரட்டியபடியே, நாட்டு நடப்புகளை பெரியவர்கள் அலச ஆரம்பித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement