Advertisement

அக்கம் பக்கம்

புத்துணர்ச்சி வந்தாச்சு!



பீஹாரில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து, கடந்த சட்டசபை தேர்தலை சந்தித்த, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், அபார வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது.ஆனால், இரண்டு ஆண்டுகளாக, பெயரளவுக்கு தான், நிதிஷ் குமார், முதல்வராக இருந்தார். லாலு பிரசாத் யாதவும், அவரது மகன்களும், ஆட்சியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர்.இவர்களை மீறி நிதிஷ் குமாரால், எதையுமே செய்ய முடியவில்லை. இதனால், தர்மசங்கடத்தில், அவர் தவித்தார். இந்த காரணத்தால், பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்; அப்படியே பங்கேற்றாலும், இறுக்கமான முகத்துடன் தான், மேடையில் அமர்ந்திருப்பார்.
'சில விஷயங்களில், சகிப்புத்தன்மை இருந்தால் தான், அரசியலில் தாக்குப்பிடிக்க முடியும்' என, நிதிஷ் குமாரை, அவரது நண்பர்கள் சமாதானப்படுத்தி வந்தனர்.பொறுத்து பொறுத்து பார்த்த அவர், கடைசியில் பொங்கி எழுந்து, லாலு கட்சியை துாக்கி எறிந்து, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, முதல்வர் பதவியை தக்க வைத்தார்.இப்போது நிதிஷிடம், தலைகீழ் மாற்றம் தென்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பதுடன், எப்போதுமே, அவரது முகத்தில் நிரந்தரமான புன்னகையையும் காண முடிகிறது.இதைப் பார்த்து, அவரது கட்சியினர், 'எங்க தலைவருக்கு புத்துணர்ச்சி வந்துவிட்டது; இனிமேல் தான், அதிரடி அறிவிப்பு எல்லாம் வரும்' என, மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement