Advertisement

பக்க வாத்தியம்

தெரியாத மாதிரி நடிக்கிறாரோ!


நீலகிரி மாவட்டம், கூடலுார், பந்தலுார் பகுதி, 'டான்டீ' தோட்டங்களில், 'சில்வர் ஓக்' மரங்களை வெட்ட, ஆளும் கட்சி சார்பில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம், சமூக ஆர்வலர்கள் இடையே, பெரும் எதிர்ப்பை கிளப்பி உள்ளது.முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வந்த, கூடலுார் தொகுதி, எம்.எல்.ஏ., திராவிட மணியிடம், நிருபர்கள் சிலர், இது குறித்து கேட்டனர். எம்.எல்.ஏ.,வோ, 'என்னது... மரம் வெட்றாங்களா... எனக்கு எதுவும் தெரியாதே!' என, 'ஒன்றும்' தெரியாதவர் போல,
கூறினார்.அங்கிருந்த சிலர், 'டான்டீ தோட்ட தொழிலாளர்களின், ஓட்டுகளை வாங்கி ஜெயித்த, எம்.எல்.ஏ.,வுக்கு, டான்டீயில் என்ன நடக்கிறது என்றே தெரியாத மாதிரி, ஆச்சரியம் காட்டி, நடிக்கலாம்... ஆனால், அவருக்கு எவ்வளவு போகிறது என்பதை கேள்விப்படும் போது, நமக்கெல்லாம் அதிர்ச்சியா இருக்கு...' என, வேதனைப்பட்டனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement