Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
பெண்ணுக்கு பெருமை
ராஜஸ்தான் மாநில அரசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சாதனை படைத்தவர்களுக்கு 'அம்ரிதா தேவி பிஷ்னோயி' வனப்பாதுகாப்பு விருதை வழங்குகிறது. அம்ரிதாதேவி சுற்றுப்புறச்சூழல் விஞ்ஞானி அல்ல. சாதாரண கிராமத்து பெண்மணி. ராஜஸ்தானில் உள்ள பிஷ்னோய் மலைவாழ் மக்களுக்கு கேஜரி மரம் இறைவனின் வடிவமாகும். யாராவது இந்த மரத்தை வெட்ட வந்தால், தங்கள் உயிரைக் கொடுத்து மரங்களைக் காப்பாற்றுவார்கள். 1731ல் அம்ரிதா தேவி பிஷ்னோயி, கேஜரி மரங்களை வெட்டும் போது, குறுக்கே நின்று உயிர் நீத்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக அவரது தியாகத்தை போற்றும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
தகவல் சுரங்கம்
சுதந்திர தின செங்கோட்டை
இந்தியில் செங்கோட்டையை 'லால் கீலா' என அழைக்கின்றனர். ஷாஜகான் ஆட்சிக்காலத்தில் 1638ல் இதனை கட்டத் தொடங்கினார், 1648ல் இந்தக்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. செங்கோட்டையின் நீளம் 2 கி.மீ. கட்டடங்களின் சராசரி உயரம் 18 மீட்டர். பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களில் இந்த உயரம் 33 மீட்டர் ஆக உள்ளது. இதன் முக்கிய நுழைவுவாயில் 'லாகூர் கேட்' என அழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றாற்போல் இந்த லாகூர் கேட் இருக்கும் திசையில் தான் லாகூர் உள்ளது. செங்கோட்டையின் உள்ளே 3 அருங்காட்சியகங்கள் செயல்படுகின்றன. பகதூர்ஷா மீதான விசாரணை, செங்கோட்டையில் தான் நடைபெற்றது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement