Advertisement

இயற்கை உலகம்: ஆதிகாலத்து மலர் எப்படி இருந்திருக்கும்?

மனிதர்களின் பரிணாம வளர்ச்சி பற்றி பல ஆய்வுகளும், புதைபொருள் சான்றுகளும் கிடைத்தபடியே இருக்கின்றன. ஆனால், இந்த உலகுக்கு அழகு சேர்க்கும் பூக்களின் பரிணாம வளர்ச்சி பற்றி அறிவியலுக்கு அதிகம் தெரியவில்லை. ஐரோப்பிய தாவரவியலாளர்கள் இது குறித்து சேகரித்த தகவல்களை வைத்து, உலகின் ஆதி மலர் எப்படி இருந்திருக்கும் என்று அண்மையில் வரைந்து காட்டியுள்ளனர். அவர்களின் கணிப்புப்படி படத்தில் உள்ளது போல அந்த ஆதி மலர் இருந்திருக்கலாம். அது நிச்சயம் ஆண், பெண் என இருபால் மலராகவே இருந்திருக்கும் என தாவரவியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதன் வடிவமும் படத்திலிருப்பது போலவே இருக்கலாம் என்றாலும், அதன் நிறம், மணம் போன்றவற்றை ஊகிக்க தகவல்கள் போதவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement