Advertisement

சிகரெட் முனையில் சாலை!

ஆண்டுதோறும், உலகெங்கும் ஊதி வீசப்படும் சிகரெட் துண்டுகளின் எடை மட்டும், 12 லட்சம் டன்! இந்த சிகரெட் துண்டுகள் நச்சுக் குப்பையாகக் கருதப்படுகின்றன. இவை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதை தடுக்க, சாலைகள் போடப் பயன்படுத்தலாம் என்கின்றனர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆர்.எம்.ஐ.டி., பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
ஆர்.எம்.ஐ.டி., விஞ்ஞானிகள், சிகரெட் துண்டுகளின் நிகோடின் நச்சுக்கள் வெளியேறாதபடி, பாரபின் மெழுகு, பிட்டுமென் போன்றவற்றுடன் கலந்து மூடினர். பிறகு அவற்றை சாலை போடப் பயன்படும் தார் மற்றும் ஜல்லி மணல் போன்றவற்றுடன் கலந்தனர். பரிசோதனை முறையில், இந்தக் கலவையைக் கொண்டு போடப்பட்ட சாலை, சூரிய வெப்பத்தை ஈர்க்காததுடன், கனரக வாகன போக்குவரத்தையும் திறமையாக சமாளித்தது.
நகர்ப்புறங்களில் சாலை ஈர்க்கும் வெப்பம், நகர வெப்ப அளவை அதிகரிப்பதுண்டு. எனவே, சிகரெட் துண்டுகள் கலந்த சாலைகளை அதிகரித்தால், நகர வெப்பமாதல் விளைவை குறைப்பதோடு, சிகரெட் துண்டுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசையும் தடுக்கலாம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement