Advertisement

அறிவியல்பூர்வ 'செல்பி' எடுக்க ஒரு செயலி!

'செல்பி' எடுப்பது இன்றைய டிஜிட்டல் கலாசாரத்தில் முக்கியமான சடங்காகிவிட்டது. செல்பி எடுத்த பிறகு, அதிலுள்ள குறைகளை, 'டிங்கரிங்' செய்ய பல செயலிகள் வந்துவிட்டன. ஆனால், செல்பி எடுக்கும்போதே, நல்லபடியாக எடுக்க உதவும் செயலி இருந்தால் எப்படி இருக்கும்?
அதைத்தான் செய்திருக்கின்றனர், கனடாவின் வாட்டர்லுா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
சாதாரண தோற்றம் கொண்ட சிலரை புகைப்படம் எடுத்து, அதை டிஜிட்டல் மயமாக்கி, அதன் கோணம், ஒளி அளவு போன்றவற்றை மாற்றி, சில ஆயிரம் பேரிடம் தந்து கருத்து கேட்டது வாட்டர்லுா ஆராய்ச்சிக் குழு. பலரும் பிடித்ததாகச் சொன்ன செல்பிக்களின் பொதுவான அம்சங்களைக் கண்டறிந்து, அதை செயற்கை நுண்ணறிவு மென்பொருளிடம் தந்து நிரல் எழுதச் செய்தனர்.
அந்த நிரலை ஒரு மொபைல் செயலியாக ஆக்கினர். அந்த செயலி, ஒருவர் புகைப்படம் எடுக்கும்போதே, அவரது, நிறம், உடை, பின்னணி காட்சி, வெளிச்சத்தின் அளவு, கேமரா கோணம் ஆகியவற்றை உணர்ந்து, சரியான விகிதத்தை திரையில் தெரிவிக்கும். அதற்கு ஏற்றபடி ஒருவர் செல்பியை, 'கிளிக்' செய்தால் போதும்.
அந்த செயலியைக் கொண்டும், அந்த செயலி இல்லாமலும் எடுத்த படங்களை, வாட்டர்லுா குழு, பலரிடம் தந்து, மதிப்பிடச் சொன்னது. புதிய செயலி எடுத்த செல்பிக்களுக்கு, 26 சதவீதம் கூடுதல் மதிப்பெண் கிடைத்தது. எனவே, விரைவில் அந்த செல்பி செயலியை நீங்கள் சந்தையில் எதிர்பார்க்கலாம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement