Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

பெட்ரோல் கலப்படத்தில் முதலிடம்


பெட்ரோலுடன் கலப்படப் பொருளாக நாப்தா சேர்க்கப்படுகிறது. பெட்ரோலிய சுத்திகரிப்பின் போது கிடைக்கும் பொருட்களில் நாப்தாவும் ஒன்று. நாப்தா என்பது பொதுவாக உரங்கள், பூச்சிக் கொல்லிகளுக்கு முக்கிய மூலப்பொருள். இதனை நாப்தலீன் என்றும் அழைப்பர். பூச்சிகளைக் கொல்லும் அந்து உருண்டைகள் உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. பெட்ரோலு டன் நாப்தா சேர்க்கப்படுவது இன்ஜின்களின் ஆயுட்காலத்தையும் பாதிக்கும். பெட்ரோலுடன் ஒப்பிடுகையில், நாப்தாவின் விலை குறைவு. இதன் அடர்த்தி பெட்ரோலின் அடர்த்திக்குச்
சமமாக இருப்பதால் கலப்படத்தைக் கண்டறிவது கடினம்.

தகவல் சுரங்கம்

சுதந்திர தினத்தில் பாரத மாதா


தாகூரின் மருமகன் அபனீந்திரநாத் தாகூர் பாரத மாதாவை முதன்முதலில் ஓவியமாகச் சித்தரித்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிரவாதியாகச் சித்தரிக்கப்படும் பிபின் சந்திர பால், பாரத் மாதா உருவத்தை இந்திய மக்களின் மனதில் பதிக்க முயற்சிகளை மேற்கொண்டார். 1873ல் கிரண் சந்திர சட்டோபாத்யாய் என்னும் வங்கமொழி எழுத்தாளர் 'பாரதமாதர்' என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். இந்தி மொழிப் படைப்புகளுக்காக ஞானபீட விருதைப் பெற்ற சுமித்ரா ரந்தன்பந்த் 'பாரத் மாதா கிராம வாஸினி' என்ற புகழ்பெற்ற கவிதையை எழுதினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement