Advertisement

அக்கம் பக்கம்

கறார் ஆசிரியர்!



பா.ஜ., - எம்.பி.,க்கள் மீது, கடும் கோபத்தில் இருக்கிறார், அந்த கட்சியின் தலைவர், அமித் ஷா. 'கொஞ்சம், சிரித்து பேசினால், நம் தலையில், மிளகாய் அரைத்து விடுவர் போலிருக்கிறதே' என, கொந்தளிக்கிறார் அவர்.சமீபத்தில், பார்லிமென்டில் சில முக்கிய மசோதாக்கள் மீதான விவாதங்கள் நடந்த போது, ஆளும் கட்சி வரிசையில், பெரும்பாலான, இருக்கைகள் காலியாகி இருந்தன.பா.ஜ., - எம்.பி.,க்கள் பலர், சபைக்கு வராததால், ஆளும் கட்சிக்கு பெரும் தர்மசங்கடமாகி விட்டது. எதிர்க்கட்சிகளை சமாளிக்க முடியாமல், மத்திய அமைச்சர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது.இந்த தகவல், அமித் ஷாவுக்கு தெரிந்ததும், தாம் துாம் என, குதித்து விட்டார். கட்சியின், அனைத்து, எம்.பி.,க்களையும் அழைத்து, கடுமையாக,'டோஸ்' விட்டார்.'கட்சிக்கு உள்ள இமேஜை கெடுத்து விடுவீர்கள் போலிருக்கிறதே; முக்கியமான மசோதாக்கள் பற்றி விவாதிக்கும் போது, சபைக்கு வருவதை விட, வேறு என்ன வேலை; எதிர்காலத்தில் இதுபோல் நடந்தால், அவ்வளவு தான்' என, எச்சரித்தார்.
சப்த நாடியும் அடங்கிப் போன, எம்.பி.,க்கள் சிலர், 'நாங்கள் உள்ளே வருவதற்கு தாமதமாகி விட்டது; அதற்குள், சபையின் நுழைவாயில் மூடப்பட்டு விட்டது; இதனால் தான், வர முடியவில்லை; இனிமேல் இப்படி நடக்காது' என, நடுங்கியபடியே கூறினர்.அமித் ஷாவோ, 'இனிமேல், இவர்களிடம் கருணை காட்டவே கூடாது; கறாரான ஆசிரியர் போல் தான் நடக்க வேண்டும் போலிருக்கிறது' என, கடுப்புடன் கூறி வருகிறார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement