Advertisement

பக்க வாத்தியம்

குமரி அனந்தனை பேச வைத்த தாமரை!


மதுரையில், 'அனுஷத்தின் அனுக்கிரஹம்' சார்பில், 'மகா பெரியவர் மகிமை' எனும் தலைப்பில், காஞ்சி மகா சுவாமிகள் குறித்து, நிர்வாகி நெல்லை பாலு பேசினார்.'காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், காஞ்சி பெரியவரை பார்க்க வந்தார். அவருக்கு தொண்டையில் ஆப்பரேஷன் செய்திருந்ததால், பேச இயலவில்லை. காஞ்சி மகா சுவாமிகள் மொட்டாக இருந்த ஒரு தாமரை மலரை எடுத்து, ஒவ்வொரு இதழாக பிரித்தார். 'ஒவ்வொரு இதழையும் பிரிக்கும் போதும், குமரிஅனந்தனிடம் மாற்றம் தெரிந்தது; முகம் மலர்ச்சியடைந்தது. அனைத்து இதழ்களையும் பிரித்து விட்டு, நடுவில் இருந்த காயை பிய்த்து, காஞ்சி பெரியவர், குமரிஅனந்தனிடம் கொடுத்து, உண்ணும்படி கூறினார். குமரிஅனந்தன் தாமரைக்காயை உண்டார். அடுத்த சில நிமிடங்களில், குமரிஅனந்தன், குற்றாலம் அருவி போல், தனக்கே உரிய பாணியில் பேசினார். பேச முடியாமல் வந்தவரை, காஞ்சி பெரியவர் பேச வைத்த அதிசயம் நடந்தது' என்றார்.'கடவுளின் அவதாரமாக, காஞ்சி பெரியவர் விளங்கினார்; எளிமையாக வாழ்ந்தார். தற்போது, புதிது புதிதாகக் கிளம்பும் சாமியார்களைப் பார்த்தாலே, வெறுப்பாக உள்ளது' என, பார்வையாளர்கள் முணுமுணுத்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement