Advertisement

அக்கம் பக்கம்

நேற்று பெய்த மழையில்...!


உ.பி., முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான, அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகளும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான, மிசா பார்தி மீது, கடும் கோபத்தில் உள்ளார்.'இந்த பொண்ணு எதற்கு, தேவையில்லாமல், எங்களை வம்புக்கு இழுக்கிறது' என, தன் நண்பர்களிடம் அடிக்கடி புலம்புகிறார்.சமீபத்தில், மிசா பார்தி தெரிவித்த சில விஷயங்கள் தான், அகிலேஷ் யாதவை, இப்படி புலம்ப வைத்துள்ளது. 'வருமான வரித் துறை, சி.பி.ஐ., ஆகிய அமைப்புகள் மூலம், மத்திய அரசு கொடுக்கும் நெருக்கடிக்கு பணிந்து விட்டீர்களா' என, மிசா பார்தியிடம், செய்தி
யாளர்கள் கேட்டனர்.இதற்கு பதிலளித்த மிசா பார்தி, 'சி.பி.ஐ., போன்ற அமைப்புகள், மத்தியில் ஆளும், பா.ஜ., அரசின் அடிமைகள் போல் செயல்படுகின்றன. எவ்வளவு வழக்கு போட்டாலும், எங்கள் குடும்பத்தின் ஒற்றுமையை, யாராலும் சீர்குலைக்க முடியாது' என்றார்.இத்துடன் நிறுத்தியிருந்தால், நன்றாக இருந்திருக்கும்... ஆனால், தொடர்ந்து பேசிய மிசா பார்தி, 'உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியில், முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகன் அகிலேஷ் யாதவுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி, அவர்கள் குடும்பத்தையே, மத்திய அரசு பிரித்து விட்டது. ஆனால், எங்களை அப்படி செய்ய முடியாது' என்றார்.
இதைக் கேள்விப்பட்ட அகிலேஷ் யாதவ், 'நேற்று பெய்த மழையில், இன்று முளைத்த காளான்கள் எல்லாம், எங்கள் குடும்பத்தை பற்றி, இப்படி பேசும்படியாகி விட்டதே...' என, கண்களை கசக்குகிறார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement