Advertisement

பக்க வாத்தியம்

விவசாயி பேச்சு; வெலவெலத்த அதிகாரிகள்!


கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகாவில், ஆழியாறில், இந்தாண்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை. துணை அணைகளான காடம்பாறை, மேல்ஆழியாறு அணைகளில் இருக்கும் தண்ணீரை, பாசனத்துக்கு வழங்க வேண்டும் என, பழைய ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கான ஆலோசனை கூட்டம், ஆனைமலையில் நடந்தது. கூட்டத்தில், விவசாயி பட்டீஸ்வரன் பேசும்போது, 'தண்ணீர் கிடைக்காததால் தான், விவசாயிகளிடம் ஒற்றுமை வலுவடைந்துள்ளது. நம் எல்லா பிரச்னைக்கும், இப்படி ஒன்று சேர்த்து போராட வேண்டும். ஆழியாறு பழைய ஆயக்கட்டுக்கு தண்ணீர் திறக்காவிட்டால், போராட்டம் நடத்த ரோட்டுக்கும் வருவோம்; உரிமையை நிலைநாட்ட கோர்ட்டுக்கும் போவோம்' என, ஆவேசமாக பேசினார்.விவசாயிகள் போல வேடமணிந்து, உளவு பார்க்க வந்திருந்த, பொதுப்பணித் துறை ஊழியர்கள், பட்டீஸ்வரனின் ஆவேசப் பேச்சைக் கேட்டு, வியர்க்க விறுவிறுக்க, அங்கிருந்து நகர்ந்தனர்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement