Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
மீனில் கவனம்
கடல்மீன்களை விட கண்மாய் மீன்களே சிறந்தவை என்பது தமிழர்களின் எண்ணம். நீர் நிலை ஆதாரங்களான கண்மாய்கள் அழிவதால் வட்டார அளவில் கிடைக்கும் மீன் வகைகளின் வரத்து குறைகிறது. மீன்கள் வளரும் சூழ்நிலையும் சுகாதாரமானதாக இருக்க வேண்டும். மீன் சிறந்த உணவு தான் என்றாலும் தரமான முறையில் சமைக்கப்பட்ட மீன்களையே உண்ண வேண்டும். கையேந்தி பவன்களில் விற்கும் மீன்களை, பல கடைகளில் நல்ல கொதி நிலையில் நீண்ட நேரம் வேக வைப்பதில்லை. இதனால் மீன் நாடாப்புழுக்கள் உடலில் சேரும் அபாயம் உள்ளன. இவை மனித சிறுகுடலில் தங்கி வாழும். ரத்தசோகையை ஏற்படுத்தும்.
தகவல் சுரங்கம்
சுதந்திர தினத்தில் சங்கராபரணம்
சுதந்திர தினத்தில் இசைக்கப்படும் தேசிய கீதம் ''ஜனகனமன''வின் ராகம், சங்கராபரணம். இந்த ராகம் இந்தியாவின் அனைத்து இசை வடிவங்களிலும் வெவ்வேறு பெயர்களில் உள்ளது. தமிழிசையில் சங்கரா பரணத்தை பழம்பஞ்சுரம் என்பர். இந்துஸ்தானி இசையில் சங்கரா பரணத்திற்கு இணையான ராகம் பிலாவட் தாட். கர்நாடக இசையில் ஒவ்வொரு ராகத்தின் பெயருமே, அந்த ராகத்தின் இயல்பை வெளிப்படுத்தும் விதத்தில் தான் இருக்கும். சங்கரன் என்னும் சிவனின் ஆபரணம் பாம்பு. சங்கரா பரணம் என்பது மறைமுகமாக பாம்பைக் குறிக்கும் ராகம். இந்த ராகத்தில், பாம்பின் சீற்றத்தை உணர முடியும் என்பதால் சங்கராபரணம் என பெயர் வைத்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement