Advertisement

சொல்கிறார்கள்

அலர்ஜி காணாமல் போவது நிச்சயம்!


துணிகளில் இயற்கை சாய பிரின்டிங் செய்து வரும் ராணி பொன்மதி: ஐ.டி., துறையில் வேலை பார்த்து வந்தேன். 'ஏசி' சூழல், நேரங்கெட்ட நேரத்தில் சாப்பாடு, 'ஸ்ட்ரெஸ்' என எல்லாம் சேர்ந்து, உடல் பருமன் பிரச்னையை கொடுத்தது. எடையை குறைக்க எடுத்த முயற்சியால் பலனில்லை.
கடைசியாக, சிறுதானிய உணவுப் பழக்கத்துக்கு மாறிப் பார்க்கலாம் என, முயன்றேன். சிறுதானியங்களை சாப்பிட ஆரம்பித்தவுடன், எடையில் மாற்றம் தெரிந்தது. அந்த உற்சாகத்தில் சிறுதானியங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினேன்.
அப்போது, வெறும் உணவில் மட்டும் மாற்றம் இருந்தால் போதாது; ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் அது பின்பற்றப்பட வேண்டும் என்பது புரிந்தது. உணவுக்கு அடுத்ததாக உடை விஷயத்திலும், இயற்கை சார்பு வேண்டும் என தெரிந்தது.
இந்நிலையில், கெமிக்கல் டை தயாரிக்க மட்டுமே, பயிற்சி வகுப்புகள் இருந்தன. எனவே, சாயம் தயாரிக்கும் அடிப்படை பயிற்சியை தெரிந்து கொள்ள, அந்த வகுப்புகளுக்கு போனேன். அங்கே நான் கற்ற தொழில்நுட்பங்களை வைத்து, இயற்கையான முறையில் சாயம் தயாரிக்க முயற்சி செய்தேன்.
மஞ்சள், நீலம், சிவப்பு என, முதன்மையான கலர்களை பீட்ரூட், கேரட், அவுரி மாதிரியான இயற்கையான பொருட்களில் இருந்து எடுக்கலாம்; பனை வெல்லத்தில் இருந்து கறுப்பு கலர் எடுக்கலாம். இந்த அடிப்படை கலர்களை வைத்து, மற்ற கலர்களை கொண்டு வரலாம்.
ஆனால், கெமிக்கல் சாயத் தயாரிப்பு டெக்னிக்குகள் மூலம், இயற்கையான சாயம் தயாரிக்கும் முயற்சிகள், எடுத்த உடனே கைகொடுக்கவில்லை. துணிகளில் சாயம் ஏற்றும்போது, தாமரை இலைத் தண்ணீர் மாதிரி ஒட்டாமல் போனது. எதிர்பார்த்த வண்ண கலவை வரவில்லை; ஆனாலும் நான், சோர்ந்து போகவில்லை.
செயற்கையான பொருட்கள் எதையும் சேர்க்கக் கூடாது என்ற உறுதியோடு, டெக்னிக்குகளை, மாற்றி மாற்றிப் பயன்படுத்தி பார்த்தேன். பல தோல்விகளுக்கு பின் தான், எதிர்பார்த்த முடிவு கிடைத்தது.
இயற்கை சாயங்களால், பிளாக் பிரின்டிங், ரோல் பிரின்டிங், ஸ்டென்சில் ஆர்ட், பிரஷ் ஆர்ட், கலம்காரி, டை அண்ட் டை பிரின்டிங் முறைகளை செய்து வருகிறேன்.
புடவை, துப்பட்டா, டேபிள் கிளாத், திரைச்சீலை, பவுச், கைப்பை, படுக்கை விரிப்பு, தலையணை உறை என எதிலும், இந்த பிரின்டிங் முறைகளை செய்யலாம். துணிகளாலும் அலர்ஜி வரும் என தெரியாமல், நிறைய பேர் உள்ளனர். அவர்கள், இந்த இயற்கை சாயம் ஏற்றிய துணிகளை பயன்படுத்தினால், அலர்ஜி காணாமல் போவதை உணர்வர்.
காட்டன் மற்றும் சில்க் காட்டன் துணிகளில் செய்து, வீட்டுக்குள் இருந்தபடியே இதை ஒரு பிசினசாகவும் துவங்கலாம். முதலில் துப்பட்டாவில் செய்யத் துவங்கி, அதற்கு பின் புடவை, பெரிய துணி என, அடுத்த கட்டத்துக்கு போகலாம்; 5,000 ரூபாய் முதலீடு போதுமானது.
துப்பட்டாவுக்கான துணி, மூலப் பொருட்கள் சேர்த்து, 200 ரூபாய் செலவாகும். சாயமேற்றி, பிரின்ட் செய்த பின் அதையே, 350 முதல், 400 ரூபாய் வரைக்கும் விற்கலாம். ஆன்லைன் மார்க்கெட்டிங் பக்கமும் கவனம் செலுத்தினால், லாபம் நிச்சயம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • Thamizh - Chennai,இந்தியா

    contact details please

  • Manian - Chennai,இந்தியா

    ஒரு முறை அஜாந்தா (ஔரங்காபாத் - மும்பையிலிருந்து இரவு பயணம்) போய் கிமு 6 -ம் நூற்றாண்டு இயற்கை சாய முறையில் புத்தரின் வாழ்க்கையை சுவர்களிலும், கூறையிலும் வரைந்திருப்பதை பாருங்கள். ஜப்பானியர்களும் ஜெர்மனியர்களும் அதை பாதுகாக்க செலவழிக்கும் அழகை பாருங்கள். அங்கே இயற்கை வண்ணம் தயாரிப்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். 3 - முறை பார்த்தும் இன்னும் பார்க்க ஆசை விடவில்லை. இந்தியர்களில் 99.9 இதை பார்த்திருக்க மாட்டார்கள்

  • Darmavan - Chennai,இந்தியா

    ராணி பொன்மதி தொடர்பு எண் தெரிவிக்கலாம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement