Advertisement

அறிவியல் ஆயிரம்

தாய்ப்பாலை பதப்படுத்துதல்


சுத்திகரிக்கப்பட்ட புட்டியில் வைத்து பாதுகாக்கும் தாய்ப்பாலை பிரிட்ஜில் 5 நாட்களும், பிரீசரில் 14 நாட்களும் வைத்து பாதுகாக்கலாம். தாய்ப்பாலை பிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து ஆறு மணி நேரங்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும். தாய்ப்பாலை நேரடியாக அடுப்பில் வைத்து சூடுபடுத்தக்கூடாது. மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவதும் தவறு. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதைச் சுட வைத்து அதன் மீது தாய்ப்பாலை வைத்து சூடு செய்யலாம். தாய்ப்பாலை கொதிக்க வைக்கக்கூடாது. ஒரு முறை தாய்ப்பால் புட்டியைத் திறந்தால், அந்தப்பாலை மிச்சம் வைத்து அடுத்த வேளைக்கு கொடுப்பதும் தவறு.

தகவல் சுரங்கம்



தேசியக்கொடி மாறிய காரணம்



தேசியக்கொடியின் ஒரு பகுதியில் என்ன இருக்கிறதோ அது தான் பின் பகுதியிலும் தெரிய வேண்டும் என்பது விதி. ராட்டையும், நுாலும் இருந்த போது ஒரு பகுதியில் தெரிந்த ராட்டையும் நுாலும், பின்பகுதியில் இடவலம்
மாறி தெரிந்தது. ராட்டை சாதாரண குடிமக்களையும் அவர்களின் தொழிலையும் குறித்தது. ராட்டையை நீக்க தயங்கியவர்கள் ராட்டையின் மையத்தை சக்கரமாக வடிவமைத்தனர். எந்த சக்கரத்தை வைக்கலாம் என விவாதித்த போது அசோகரின் சக்கரமே தேர்வானது. இப்படி தான் தேசிய கொடியில் இருந்த ராட்டை, சக்கரமாக மாறியது. ராட்டை இருந்த கொடி காங்., கொடியானது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement