Advertisement

அக்கம் பக்கம்

தவம் பலிக்குமா?


'அரசியலுக்கு லாயக்கு இல்லை என நம்மை ஒதுக்கி வைத்து விட்டனர்; இதனால், கவர்னர் பதவி நிச்சயமாக கிடைக்கும்' என, பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார், குஜராத் மாநில முன்னாள் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஆனந்திபென் படேல்.பிரதமர் பதவிக்காக, குஜராத் முதல்வர் பதவியை, நரேந்திர மோடி ராஜினாமா செய்தபோது, அவருக்கு சரியான மாற்று என கருதப்பட்டவர் தான், ஆனந்திபென் படேல்.இதனால், குஜராத் முதல்வர் பதவி ஆனந்தியை தேடி வந்தது. ஆனால், அங்கு நடந்த உள்ளடி அரசியல் வேலைகளுக்கு, அவரால், ஈடுகொடுக்க முடியவில்லை.முதல்வராக பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, தலைசுற்றி விட்டது, அவருக்கு. நேரில், நண்பர்கள் போல் பேசிய கட்சி நிர்வாகிகள், கட்சி மேலிட தலைவர்களிடம் பேசும்போது, அவரை வசமாக போட்டு கொடுத்தனர்.இதனால், 'ஆனந்திபென் படேல், முதல்வராக நீடித்தால், குஜராத்தில் அடுத்து நடக்கும் சட்டசபை தேர்தலில் தோல்வி உறுதி' என முடிவு செய்த, பா.ஜ., மேலிடம், அதிரடியாக அவரை துாக்கி விட்டு, விஜய் ரூபானியை, முதல்வராக நியமித்தது.அப்போது, 'உங்களுக்கு கவர்னர் பதவி நிச்சயம் கிடைக்கும்' என, மேலிட தலைவர்கள் சிலர், அவரிடம் உறுதிமொழி கொடுத்தனர்.இதை நம்பி, கவர்னர் பதவி, நம்மைத் தேடி வரும் என, காத்திருக்கிறார், ஆனந்திபென் படேல். கவர்னர் பதவி மட்டுமல்ல; கட்சிக்காரர்கள் கூட, அவரைத் தேடி, வீட்டுப் பக்கம் வருவது இல்லை.
ஆனாலும், 'நிச்சயம் ஒருநாள், கவர்னராக பதவி யேற்பேன்' என, நம்பிக்கையுடன், தொலைபேசி முன், தவம் கிடக்கிறார், ஆனந்திபென் படேல்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement