Advertisement

பக்க வாத்தியம்

மாணவியரா, பாகுபலிகளா!


மதுரை, லேடி டோக் கல்லுாரி ஆண்டு விழா மற்றும் 'ஸ்டூடண்ட் கேபினட்' பொறுப்பேற்பு விழா, கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடந்தது.கல்லுாரி முதல்வர் கிறிஸ்டியனா சிங், மாணவியருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஒவ்வொரு மாணவியும் மேடை முன் நின்று, கைகளை உயர்த்தி, 'பதவியில் இருக்கும் வரை உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பேன்' என, உணர்ச்சி பொங்க உறுதி மொழி எடுத்தனர்.பின் கலெக்டர் பேசுகையில், 'மாணவியர், மிக பெரிய சக்தி. துாங்கா நகரான மதுரையை துாய்மை நகராக மாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும். 'ஸ்டூடண்ட் கேபினட்'டில் பொறுப்பேற்ற ஒவ்வொரு மாணவியும், 'பெண் பாகுபலி'களாக கண்முன் தெரிந்தனர்...' என்றார்.கலெக்டரின் பேச்சை கேட்ட மாணவியரின் கை தட்டலால், அரங்கமே அதிர்ந்தது. 'இப்படி உற்சாகப்படுத்தினால், யார் தான் வேலை செய்ய மாட்டாங்க...' என, பேராசிரியர் ஒருவர் சொல்ல, அருகில் நின்றிருந்த மற்றொரு பேராசிரியர், 'நாமும் இந்த, 'டெக்னிக்'கை மாணவியர்கிட்டே பயன்படுத்த வேண்டியது தான்...' என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement