Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
எல்லைகள் இல்லாத இசை
சுதந்திர தினத்தன்று ராணுவ அணிவகுப்புகளில் இசைக்கப்படும் பாடல் 'சாரே ஜஹாங் சே அச்சா'. இது உருது மொழிப் பாடல். எழுதிய கவிஞர் சர். முகமது இக்பால், பாக்., அரசால் 'தேசியக் கவியாக' அறிவிக்கப்பட்டவர். இவர் சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் சியால்கோட்டில் பிறந்தார். லாகூரில் மறைந்தார். இவரது சமாதி இன்றும் லாகூரில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவரது 'சாரே ஜஹாங் சே அச்சா' தான் சுதந்திரம் பெற்ற அன்றும் பார்லிமென்டில் பாடப்பட்டது. இக்பால் என்றால் 'புகழ்' என அர்த்தம். இவர் தாமதமாக பள்ளி வந்த போது, ஆசிரியர் ஏன் தாமதம் என கேட்க 'இக்பால் (புகழ்) எப்போதும் தாமதமாகத் தான் வரும்' என்றாராம்.
தகவல் சுரங்கம்
பீச் பழ மாதம்
பீச் என்பது தமிழில் 'குழிப்பேரி' என மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. பீச் பழத்தின் சீசன் மே மாதம் தொடங்கி செப்டம்பரில் நிறைவு பெறுகிறது. பீச் பழத்திற்கு விடை தரும் வகையில் அமெரிக்க மக்கள் ஆகஸ்ட் மாதத்தை பீச் பழ மாதமாக கொண்டாடுகின்றனர். ஆப்பிள் பழம் போன்றே இருக்கும் இந்த பீச் பழத்தில் அதிகளவில் பொட்டாசியம் உள்ளது. இதனால் ரத்த அழுத்தத்தினை சரிசெய்ய இது பரிந்துரை செய்யப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி பார்வைத் திறன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் கருவுற்ற தாய்மார்களுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement