Advertisement

பக்க வாத்தியம்

தலைவரே முட்டுக்கட்டை போடுறாரே...

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில், மதுக்கடைகளுக்கு எதிராக போராடியவர்களுக்கு,
ம.தி.மு.க., சார்பில், பாராட்டு விழா நடந்தது. முன்னாள், எம்.பி., கணேசமூர்த்தி பேசுகையில், 'நாங்கள் எத்தனை நாளைக்கு போராளிகளாக மட்டும் இருப்பது... எங்களை எப்போது தேர்தலில் ஜெயிக்க வைப்பீர்கள்? இங்கு வந்திருக்கும் பெண்கள் முடிவு செய்தால், நாங்களும் ஜெயிப்போம்' என்றார். கட்சி தொண்டர்கள், கைதட்டி உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர்.

இதை தொடர்ந்து பேசிய வைகோ, 'கணேசமூர்த்தி வருத்தப்படக் கூடாது. எனக்கு போராளியாக இருப்பதில் மட்டுமே மகிழ்ச்சி. மக்கள் பிரச்னைக்கு போராடுவதில், நான் எப்போதும் முன்னிலையில் நிற்பேன். நம் கட்சியினரும் அப்படித்தான்' என்றார். 'பாவம் கணேசமூர்த்தி... அரசு பதவி ஏதும் வாங்கலாம்னு நினைச்சா, தலைவரே முட்டுக்கட்டை போடுறாரே... அவருக்கே இந்த நிலைன்னா, நாமெல்லாம் எந்த மூலைக்கு...' என, முணுமுணுத்தனர் கட்சியின் மற்ற நிர்வாகிகள்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement